• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஜோடியாக வரும் பிரபலம்!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஜோடியாக வரும் பிரபலம்!

சூப்பர் சிங்கர்

சூப்பர் சிங்கர்

இறுதி போட்டியில் மோத போகும் நபரை தேர்வு செய்வதற்கான வைலட் கார்டு ரவுண்ட் அண்மையில் நடைபெற்றது.

  • Share this:
    சூப்பர் சிங்கர் Pre-Final நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னணி இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதி வருகை தந்துள்ளார்.

    சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் ஸ்டார் விஜய் டிவி மிகவும் பிரபலமாக இருக்க முக்கிய காரணங்களாக இருப்பதற்கு வித்தியாசமான கதையம்சம் கொண்ட சீரியல்கள் மற்றொன்று மக்களின் மனங்களை கவர்ந்த ரியாலிட்டி ஷோக்கள். பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட பல புதுப்புது ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் விஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர் ஷோவிற்கு இருக்கும் ரசிகர் வட்டம் மிக பெரியது.

    ஸ்டார் விஜய் டிவியில் 2006-ல் துவங்கி இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள சூப்பர் சிங்கரின் 8-வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் துவங்கிய இந்த சீசன் இடையே கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக சில வாரங்கள் நிறுத்தப்பட்டு, லாக்டவுன் முடிந்த பிறகு மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த சீசனின் நடுவர்களாக பிரபல பாடகர்கள் இந்த முறை சூப்பர் சிங்கர் 2021ம் ஆண்டிற்கான அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், பென்னி தயால் மற்றும் கல்பனா ராகவேந்தர் ஆகியோர் இருக்கின்றனர். மேலும் இந்த சூப்பர் சிங்கர் 8வது சீசனை மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே ஆகியோர் கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

    இந்த சீசனில் ரேஷ்மா ஷியாம், பாலாஜி ஸ்ரீ, கானா சுதாகர், அபிலாஷ், பரத், அனு ஆனந்த், மானசி, முத்து சிற்பி, அய்யனார், ஆதித்யா, ஸ்ரீதர் சேனா, அரவிந்த் உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பல கட்டங்களாக பல்வேறு பிரிவுகளின் கீழ் நடந்த போட்டியில் இறுதியாக அனு, பரத், முத்து சிற்பி, அபிலாஷ் உள்ளிட்டோர் இறுதிப்போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இதனிடையே இந்த நால்வருடன் இறுதி போட்டியில் மோத போகும் நபரை தேர்வு செய்வதற்கான வைலட் கார்டு ரவுண்ட் அண்மையில் நடைபெற்றது.

    இதில் போட்டியில் இருந்து கடைசி 4 வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்டவர்களான அய்யனார், ஸ்ரீதர் சேனா, மானஸி, ஆதித்யா பங்கேற்று மீண்டும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இவர்களில் ஸ்ரீதர்சேனா, மானசி இருவரும் தேர்வு செய்யப்பட்டு வைலட் கார்டு ரவுண்ட் மூலம் சூப்பர் சிங்கர் சீசன் 8-ன் இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளனர். இந்நிலையில் பைனல் போட்டிக்கு முன்பு சூப்பர் சிங்கர் Pre-Final நடைபெறவுள்ளது.



    இந்த சூப்பர் சிங்கர் Pre-Final நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னணி இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதி வருகை தந்துள்ளார். இதுகுறித்த அதிகாரபூர்வ ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. மேலும் அவருடன் ஹிப் ஹாப் ஆதி நடித்து வரும் 30ம் தேதி திரைக்கு வரவுள்ள சிவகுமாரின் சபதம் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்துள்ள மாதூரி ஜெயினும் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சி செப்டம்பர் 25ம் தேதி ஒளிபரப்பாக உள்ளதால் ரசிகர்கள் அவளுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: