• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சூப்பர் சிங்கர் 8 டைட்டில் வின்னர் ஸ்ரீதர் சேனா -இன்ஸ்டாவில் ரசிகர்களுக்கு நன்றி!

சூப்பர் சிங்கர் 8 டைட்டில் வின்னர் ஸ்ரீதர் சேனா -இன்ஸ்டாவில் ரசிகர்களுக்கு நன்றி!

ஸ்ரீதர் சேனா

ஸ்ரீதர் சேனா

சூப்பர் சிங்கரின் 8-ன் வெற்றியாளராக ஸ்ரீதர் சேனாவிற்கு ரூ. 10 லட்சம் பரிசுத்தொகை மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.

  • Share this:
ஸ்டார் விஜய் டிவியில் 2006-ல் துவங்கி இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள சூப்பர் சிங்கரின் 8-வது சீசன் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த சீசனின் நடுவர்களாக பிரபல பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், உன்னி கிருஷ்ணன், பென்னி தயால் மற்றும் கல்பனா ராகவேந்தர் ஆகியோர் இருக்கின்றனர்.

இந்த சீசனில் ரேஷ்மா ஷியாம், பாலாஜி ஸ்ரீ, கானா சுதாகர், அபிலாஷ், பரத், அனு ஆனந்த், மானசி, முத்து சிற்பி, அய்யனார், ஆதித்யா, ஸ்ரீதர் சேனா, அரவிந்த் உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பல கட்டங்களாக பல்வேறு பிரிவுகளின் கீழ் நடந்த போட்டியில் இறுதியாக அனு, பரத், முத்து சிற்பி, அபிலாஷ் உள்ளிட்டோர் இறுதிப்போட்டிக்கு தேர்வாகினர். இதனிடையே ஸ்ரீதர்சேனா, மானசி இருவரும் தேர்வு செய்யப்பட்டு வைலட் கார்டு ரவுண்ட் மூலம் சூப்பர் சிங்கர் சீசன் 8-ன் இறுதி சுற்றுக்குள் நுழைந்தனர்.

இந்தநிலையில் கடந்த இரண்டு நாளுக்கு முன்னர் சூப்பர் சிங்கர் 8ன் பைனல் இரண்டு சுற்றுகளாக மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் அபிலாஷ், பரத், அணு, முத்து சிற்ப்பி, ஸ்ரீதர் சேனா மற்றும் மானசி ஆகிய ஆறு பேரும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இந்த இரண்டு சுற்றிலும் சிறப்பாக பாடியும், மக்களிடம் இருந்து 33 லட்சத்திற்கும் அதிக வாக்குகள் பெற்றும் சூப்பர் சிங்கர் 8ன் டைட்டில் வின்னர் ஆகியுள்ளார் ஸ்ரீதர் சேனா.

மேலும் சூப்பர் சிங்கரின் 8ன் வெற்றியாளராக ஸ்ரீதர் சேனாவிற்கு ரூ. 10 லட்சம் பரிசுத்தொகை மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் பரத் 2ம் இடத்தையும், அபிலாஷ் 3ம் இடத்தையும் வென்றுள்ளனர். இதனை சக போட்டியாளர்கள் உட்பட சூப்பர் சிங்கர் குழுவினர் பிரமாண்டமாக கொண்டாடினர். இந்த பைனல் நிகழ்ச்சியில் அனிருத், சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது மகள், நடிகர் ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் ரித்விகா, பாலா, மணிமேகலை, செஃப் தாமு, புகழ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Also read... இன்ஸ்டா ஸ்டோரியில் தன் குழந்தையின் பெயரை அறிவித்த நடிகர் ஆர்யா - ரசிகர்கள் வாழ்த்து!

இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்ரீதர் சேனா. அதில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி, எனக்கு இந்த வெற்றி கிடைக்க நீங்கள் தான் காரணம். நீங்கள் இல்லையென்றால் எனக்கு இந்த வெற்றி கிடைத்திருக்காது, எனவே எனது வெற்றியை உங்கள் அனைவருக்கும் சமர்பிக்கிறேன்.



 




View this post on Instagram





 

A post shared by Sridhar Sena (@sridharsena)






உலகம் முழுவதும் ஏராளமானோர் என்னை உங்கள் வீட்டில் ஒரு பையனாக பார்க்கிறீர்கள், அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உங்களது ஆதரவு, பாசம், வேண்டுதல்கள் எப்போதும் எனக்கு இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். இவ்வளவு அன்பு, உறவுகளை எனக்கு ஏற்படுத்திய விஜய் டிவிக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் என்னை வெற்றி பெற வைத்த எனது நண்பர்கள் மற்றும் ரசிகர்கள், குடுப்பதினருக்கும் மிகப்பெரிய நன்றி என கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: