சூப்பர் சிங்கர் பிரபலம் மானசியின் ஆல்பம் பாடல் இணையத்தில் கலக்கி வருகிறது. இன்ஸ்டாவிலும் அவரின் ரசிகர்கள் இந்த பாடலை அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
சின்னத்திரை சேனல்களில் விஜய் டிவி மிகவும் பிரபலமாக இருக்க முக்கிய காரணம், வித்தியாசமான கதையம்சம் கொண்ட சீரியல்கள் மற்றொன்று மக்களின் மனங்களை கவர்ந்த ரியாலிட்டி ஷோக்கள். பிக்பாஸ், குக் வித கோமாளி உள்ளிட்ட பல புதுப்புது ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் விஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர் ஷோவிற்கு இருக்கும் ரசிகர் வட்டம் மிக பெரியது. எவ்வித பெரிய பின்புலமும் இல்லாமல் சூப்பர் சிங்கரில் பங்கேற்றதன் மூலம் தங்கள் குரல் வளத்தால் ரசிகர்களை கவர்ந்த பல பாடகர்களை உருவாக்கி தரும் மேடை இது என்பதால் இதற்கு மக்களின் ஆதரவு மிக அதிகம்.
பிக் பாஸ் பிரபலத்தை கரம் பிடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை! குவியும் வாழ்த்துக்கள்!
2006-ல் துவங்கி இதுவரை 8 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது சூப்பர் சிங்கர் ஷோ. இந்த 8 வது சீசனில் மக்களின் ஃபேவரெட் வரிசையில் இடம் பிடித்தார் மானசி. வைல்டு கார்டு மூலம் இறுதி மேடையில் இடம் பிடித்தார். குறிப்பாக இவரின் குரல் சித்ரா அம்மாவுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. அதே போல் மானசிக்கு இணையத்திலும் ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி முடிந்த பின்பு ரசிகர்கள் மானசியை விடுவதாக இல்லை. தொடர்ந்து அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் வீடியோக்கள், புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை வாரி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் 2 தினங்களுக்கு மானசி புதிய முயற்சியாக 1 மினிட் ஆல்பம் பாடல் ஒன்றை பாடி வெளியிட்டுள்ளார். இந்த ஆல்பத்தில் அவரே நடனம் ஆடி கலக்கி இருக்கிறார். பெண்களின் ஒருதலைக்காதல் என்ற கான்செப்டில் இந்த பாடல் படமாக்கப்பட்டுள்ளது. தனது கியூட்டான எக்ஸ்ப்ரஷன்களால் மானசி வீடியோ பார்க்கும் ஒவ்வொருவரையும் கவர்கிறார்.
மானசியின் இந்த முயற்சிக்கு சூப்பர் சிங்கர் பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லை ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை மானசிக்கு தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.