’சொப்பன சுந்தரி’ பெயர் தான் பவித்ராவின் வாழ்க்கையையே மாற்றியது! சன் டிவி நிலா ஷேரிங்க்ஸ்

சன் டிவி பவித்ரா

மிஸ் சவுத் இந்தியா என்ற பட்டத்தையும் வென்று அதன் மூலம் சன் டிவியில் ஒளிப்பரபான ‘சொப்பன சுந்தரி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

 • Share this:
  சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் நிலா தொடரில் நடிக்கும் நடிகை பவித்ரா, பல்வேறு போராட்டங்களுக்கு பின்பு தனது கெரியரில் ஜெயித்துக் காட்டியுள்ளார்.

  பொதுவாகவே சின்னத்திரை நடிகர், நடிகைகள் எளிதாக ரசிகர்களை கவர்ந்துவிடுகின்றனர். அதற்கு காரணம் தினமும் அவர்களை டிவியில் பார்ப்பதால் தான். அதுபோக சோஷியல் மீடியாவிலும் இப்போது சின்னத்திரை நடிகர்கள் பயங்கர ஆக்டிவாக இருக்கின்றனர். இன்ஸ்டா, ரீல்ஸ் போன்றவத்தில் எல்லா நேரங்களிலும் அவர்களை பார்க்கலாம். அதுபோக சீரியலைக் காட்டி தன்னிடம் இருக்கும் திறமைகளையும் அங்கு அவர்கள் தங்கள் ரசிகர்களுக்கு தெரியப்படுத்திவிடுகின்றனர்.

  அந்தவகையில் சன் டிவி நிலா தொடரில் நடிக்கும் சின்னத்திரை நடிகை பவித்ரா சோஷியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவ். அடிக்கடி லைவ் வந்து ரசிகர்களிடம் உரையாடுவார். இவருக்கு தனியாக ஃபேன்ஸ் பேட்ஜ் உள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் எல்லா இடத்திலும் பவித்ரா பதிவு செய்யும் தகவல் இதுதான். “எனக்கு அவ்வளவு ஈஸியாக இந்த இடம் கிடைக்கவில்லை. ஏகப்பட்ட அவமானங்கள், நிராகரிப்புகள் ஆனாலும் உங்களால் தான் ஜெயித்தேன்” என்பார். இதற்கு காரணம் சின்னத்திரை கெரியரில் அவர் கடந்து வந்த பாதை தான்.

  பாடகர் வேல்முருகனுடன் பவித்ரா


  நடிகை பவித்ரா 1995 சென்னையில் பிறந்து வளர்ந்தவர். பிரபல கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் செய்ய தொடங்கினார். தொகுப்பாளினி, மாடல், விஜே என பன்முகங்களை கொண்டவர்.

  2017 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா என்ற பட்டத்தையும் வென்று அதன் மூலம் சன் டிவியில் ஒளிப்பரபான ‘சொப்பன சுந்தரி’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் அவருக்கு மற்றவர்களுக்கும் அடிக்கடி சண்டை நிகழும். பெரும்பாலும் பவித்ரா தனிமைப்படுத்தபடுவார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்த ரசிகர்கள் கூட்டம் பவித்ராவுக்கு ஆதரவு தர தொடங்கினர். அதன் பின்பு சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளியாக தனது திறமையைக்காட்டி நிலா சீரியலில் லீட் ரோல் செய்ய ஒப்பந்தமானார்.

  தற்போது பவித்ரா தொகுப்பாளினியாகவும் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.
  Published by:Sreeja Sreeja
  First published: