• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 18 வருஷ எக்ஸ்பிரியன்ஸ்.. குழந்தை நட்சத்திரம் பிரியங்கா சீரியல் பக்கம் வர இதுதான் காரணம்!

18 வருஷ எக்ஸ்பிரியன்ஸ்.. குழந்தை நட்சத்திரம் பிரியங்கா சீரியல் பக்கம் வர இதுதான் காரணம்!

சன் டிவி சீரியல்

சன் டிவி சீரியல்

இதுவரை 12 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார் பிரியங்கா. திரையுலகில் 18 வருட அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்.

  • Share this:
    suntv roja serial arjun priyanka : சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரோஜா சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமான நடிகை பிரியங்கா சினி ஃபீல்டில் 18 வருடம் அனுபவம் உள்ளவர்.

    சன் டிவியில் பீக் டைமில் ஒளிப்பரப்பாகும் சீரியல் ரோஜா. இதில் லீட் ரோலில் நடிப்பவர் நடிகை பிரியங்கா நல்காரி. ஆந்திரா பொண்ணான இவர், தெலுங்கு, கன்னட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். சிறுவயதிலே டான்ஸ் மீது கொண்ட ஆர்வத்தால் முறைப்படி நடனம் கற்றுக்கொண்டார். முதன் முதலில் தெலுங்கில் இயக்குநர் சந்திரா சித்தார்த்தா இயக்கத்தில் வெளியான ‘அந்தாரி பந்துவையா’ படத்தில் நடித்த பிரியங்கா தனது அறிமுக படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்.

    அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர தெலுங்கு கன்னடத்தில் பிஸியானார். பின்பு ஈ டிவியில் ஒளிபரப்பான ‘மேகமாலா’ மற்றும் ஜெமினி டிவியில் ஒளிபரப்பான ‘ஸ்ரவனா சமீராலு’ ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்து சின்னத்திரையிலும் கால் பதித்தார். பிரியங்காவை ஆந்திர மக்கள் தங்கள் வீட்டு பெண் போல் வரவேற்றனர். அவரின் 2 சீரியல்கள்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    PRIYANKA NALKARI இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@nalkarpriyanka)






    தமிழில் சுந்தர்.சி படமான தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் ஹன்சிகா ஃப்ரண்டாக நடித்தார். இதுவரை 12 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார் பிரியங்கா. திரையுலகில் 18 வருட அனுபவத்தைக் கொண்டிருக்கிறார். சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரோஜா சீரியல் 4 வருடங்களைக் கடந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் ரோஜா அணியும் சேலைகளை பற்றி இல்லத்தரசிகள் பலமுறை சோஷியல் மீடியாவில் கமெண்ட் செய்துள்ளனர்.

    அதுமட்டுமில்லை இந்த சீரியலில் அர்ஜூன்-ரோஜா ரொமான்ஸ் காட்சிகளுக்கே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த தொடர் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரியங்கா தனி இடத்தை பிடித்துவிட்டார். கூடிய விரைவில் காஞ்சனா 3 படத்திலும் பிரியங்காவை ரசிகர்கள் பார்க்கலாம். அதிலும் ஒரு முக்கியமான ரோலில் நடிக்க இவர் தேர்வாகியிருக்கிறார். இத்தனை வருடங்கள் திரையுலகில் இருந்தும் பிரியங்காவுக்கு முதல் அடையாளத்தை தேடிக்கொடுத்தது சின்னத்திரை தான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: