Home /News /entertainment /

பிரபல ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்த சீரியல் நடிகைக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஆதாரத்துடன் வெளியிட்டார்!

பிரபல ஹோட்டலில் உணவு ஆர்டர் செய்த சீரியல் நடிகைக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ஆதாரத்துடன் வெளியிட்டார்!

சீரியல் நடிகை

சீரியல் நடிகை

தொண்டையில் சிக்கிய பிளாஸ்டிக்கை மிகவும் சிரமப்பட்டு வெளியே எடுத்ததாக வேதனையுடன் கூறி இருக்கிறார் நடிகை சாம்பவி.

    தமிழ் சின்னத்திரை ரசிகர்களை கவரும் வகையில் பல நிகழ்ச்சிகளை சேனல்கள் ஒளிபரப்பி வருகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் தவிர்க்க முடியாத இடத்தில இருப்பவை மெகா சீரியல்கள். சீரியல்களின்றி டிவி சேனல்கள் இல்லை எனும் அளவுக்கு அனைத்து முன்னணி பிரபல சேனல்களும் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை முதல் வார இறுதி நாளான சனிக்கிழமை வரை சீரியல்களை ஒளிபரப்பி தள்ளுகின்றன. வார இறுதி நாட்களில் ஒன்றான சனிக்கிழமைகளில் முன்பெல்லாம் சீரியல் ஒளிபரப்பாகாது. திங்கள் - வெள்ளி வரை 5 நாட்கள் மட்டுமே சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தது. சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தன.

    இந்த நிலை தற்போது அடியோடு மாறி வாரத்தில் 6 நாட்கள் காலை முதல் இரவு வரை சீரியல்கள் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகின்றன. பல மெகாஹிட் சீரியல்களை வழங்கி ரசிகர்களுக்கு விருந்து படைப்பதில் சன் டிவி வழக்கம் போல முன்னணியில் இருந்து வருகிறது. சன் டிவி-யில் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி முதல், 2020-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி வரை சுமார் 2 வருடங்களுக்கும் மேல் ரசிகர்களின் ஆதரவு மற்றும் வரவேற்பை பெற்று ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்த சீரியல் கண்மணி. இந்த சீரியலில் ஹீரோவாக நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் நடிகர் சஞ்சீவ்(கண்ணன் கேரக்டர், ஹீரோயினாக லீஷா(சௌந்தர்யா கண்ணன் கேரக்டரில்) நடித்து வந்தனர்.

    இதையும் படிங்க.. மைக்கை பார்த்ததும் குஷியான பிரியங்கா!

    இவர்களை தவிர இந்த சீரியலில் நடிகை பூர்ணிமா பாக்யராஜ், ஜிஷ்ணு மேனன், ஹரிப்ரியா, தேஜஸ் கவுடா, எல். ராஜா, பிரியா பிரின்ஸ், ராஜசேகர், கீர்த்திகா, மூத்த சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் உள்ளிட்ட பலர் நடித்தனர். இவர்களோடு சேர்ந்து முத்துச்செல்வி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகை சாம்பவி. திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 மணிக்கு இந்த கண்மணி சீரியல் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வந்தது. அடுத்தடுத்து வந்த கொரோனா லாக்டவுன் உள்ளிட்ட பல காரணங்கள் காரணமாக கண்மணி சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் நடிகை சாம்பவி தற்போது தெலுங்கு சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.

    இதையும் படிங்க.. கடல் கன்னியாக நடிக்கும் ஆண்ட்ரியா... லேட்டஸ்ட் புகைப்படங்கள்

    பிற நடிகைகளை போலவே சாம்பவியும் சோஷியல் மீடியாவான இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவர் இன்ஸ்டாவில் ஷேர் செய்த போஸ்ட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையில் இயங்கி வரும் பிரபல தனியார் உணவகம் ஒன்றில் ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்து சாப்பிட்டதாகவும், ஆனால் அப்போது எதிர்பாராத விதமாக ஆர்டர் செய்த வடையில் சிறிய பிளாஸ்டிக் இருந்ததாகவும் கூறி இருக்கிறார். பிளாஸ்டிக்கை கவனிக்காமல் வடையை சாப்பிட்டு விட்டதாகவும் அந்த பிளாஸ்டிக் தனது தொண்டையில் சென்று சிக்கி கொண்டதாகவும் கூறி இருக்கிறார்.




    பின்னர் தொண்டையில் சிக்கிய பிளாஸ்டிக்கை மிகவும் சிரமப்பட்டு வெளியே எடுத்ததாக வேதனையுடன் கூறி இருக்கிறார் நடிகை சாம்பவி. இது தொடர்பான இன்ஸ்டா போஸ்ட்டில் பிளாஸ்டிக் பீஸ் அடங்கிய ஃபோட்டோவுடன் நடிகை சாம்பவி கூறி இருப்பதாவது. "நான் எதிர்பார்க்கவில்லை!!! இது முருகன் இட்லி கடையில் இருந்து @muruganidli , இது ஒரு பயங்கரமான அனுபவம், நீங்கள் வெளியில் இருந்து ஆர்டர் செய்யும் போது எச்சரிக்கையாக இருங்கள், மேலும் என்னால் ஸ்விகி கஸ்டமர் கேரிடம் பேச முடியவில்லை, புகார் பதிவு செய்வது மட்டுமே swiggy App-ல் உள்ள ஆப்ஷன்கள்!!! " என்று கூறி இருக்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி