தமிழ் சினிமாவின் முன்னணியில் வலம் வரும் நடிகர்கள் பலரும் வெள்ளித்திரை வெளிச்சம் படுவதற்கு முன்னதாகவே சின்னத்திரையில் தலைகாட்டியுள்ளனர். அப்படி நடிகர் விமல் சினிமாவிற்கு வரும் முன்பு சீரியல் ஒன்றில் நடித்துள்ள போட்டோ வைரலாகி வருகிறது.
கோலிவுட்டில் கோலோச்சும் பலரின் தொடக்கம் எது என்று தேடினால், அது சென்று சேரும் இடம் தொலைக்காட்சிதான். அப்படியாக சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு சென்று சாதித்த நடிகர், நடிகைகள் ஏராளம். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சாய்பல்லவி, , ஐஸ்வர்யா ராஜேஷ், மக்கள் செல்வன்
விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன், சந்தானம், பரோட்டா சூரி என பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. அந்த பட்டியலில் தற்போது பிரபல நடிகர் ஒருவரும் இணைந்துள்ளார்.
இதையும் படிங்க.. சந்திரகலாவின் சதித்திட்டம்.. மீண்டும் கோதை அம்மாவுடன் சேர போகும் தமிழ்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விமல், இவர் சினிமாவில் ஹீரோ வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பாக அஜித், விஜய் படங்களில் சிறிய கதாபாத்திங்களில் நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான கில்லி, குருவி ஆகிய படங்களிலும், அஜித்தின் கிரீடம் படத்திலும் நடித்துள்ளார்.
இதனையடுத்து இதைத்தொடர்ந்து சசிகுமார் தயாரித்து, பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ‘மீனாட்சி சுந்தரம்’ என்ற கதாபாத்திரத்தில் பக்கத்து வீட்டு பையன் போல் நடித்த விமல் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். குறிப்பாக அந்த படத்தில் "இங்கிட்டு மீனாட்சி, அங்கிட்டு யாரு?" என பேசிய வசனம் பிரபலமானது.
2010ம் ஆண்டு வெளியான களவாணி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. இதன் பின் தொடர்ச்சியாக தூங்கா நகரம், எத்தன், மற்றும் வாகை சூட வா ஆகிய படங்களில் நடித்தார். வாகை சூட வா திரைப்படம் நார்வே சினிமா திரைப்பட விழாவில் 7 விருதுகளையும், தேசிய விருதுகளையும் வென்றது.
இதையும் படிங்க.. பாக்கியலட்சுமி சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்.! அவரே சொன்ன தகவல்
இஷ்டம், கலகலப்பு,
சில்லுனு ஒரு சந்திப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மூன்று பேர் மூன்று காதல், தேசிங்கு ராஜா, ஜன்னல் ஓரம், புலிவால், அஞ்சல, மஞ்சப்பை, ஒரு ஊருல ரெண்டு ராசா, மாப்ள சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விமல், இனியா உள்ளிட்டோர் நடித்த விலங்கு என்ற இணைய தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சித்தி சீரியலில் விமல்
இந்நிலையில் நடிகர் விமல் சினிமாவிற்கு வருவதற்கு முன்னதாக பிரபல சீரியல் ஒன்றில் நடித்த போட்டோ வைரலாகி வருகிறது. சன் டிவி-ல் ஒளிபரப்பான சித்தி சீரியலில் விமல் நடித்துள்ளது தொடர்பான புகைப்படங்கள் சோshiயல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. விமல் சென்னைக்கு சினிமாவில் நடிப்பதற்காக வந்த காலத்தில் கூத்துபட்டறையில் நடிப்பு பயிற்சி எடுத்து வந்தார். அப்போது சித்தி சீரியலில் நடிக்க கிடைத்த சிறிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார். அதன் பின்னர் தான் அவருக்கு வெள்ளித்திரையில் சின்ன, சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.