முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / குக் வித் கோமாளி சுனிதாவின் பாய் ஃபிரண்ட் இவரா? காதலை சொன்ன வீடியோ!

குக் வித் கோமாளி சுனிதாவின் பாய் ஃபிரண்ட் இவரா? காதலை சொன்ன வீடியோ!

சுனிதா குக் வித் கோமாளி

சுனிதா குக் வித் கோமாளி

சுனிதா, ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டான்ஸர் வாங்கை காதலிப்பதாக பல தகவல்கள் இணையத்தில் உலா வந்தன.

  • Last Updated :

குக் வித் கோமாளி சுனிதா காதலிக்கிறாராமே, அவர் லவ்வர் யாரு? அவரும் டான்ஸர் தானாம் என இணையத்தில் பரவி வந்த ஏகப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

விஜய் டிவி சுனிதாவுக்கு நாளுக்கு நாள் ஃபேன் பேஸ் அதிகமாகிக் கொண்டு போவதை நன்கு பார்க்க முடிகிறது. அதற்கு காரணம் அவரின் உழைப்பும், விடா முயற்சியும், தொழில் பக்தி தான் என்கிறார்கள் சுனிதாவுக்கு நெருக்கமானவர்கள். நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியில் இருந்த காலக்கட்டத்தில் இருந்தே சுனிதா விஜய் டிவியில் இருக்கிறார். பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஜோடி நம்பர் ஒன் என விஜய் டிவி நடத்திய எல்லா நடன நிகழ்ச்சியிலும் சுனிதா இருப்பார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் அவருடன் டான்ஸர் வாங் ஜோடி சேர்ந்து ஆடி இருப்பார். இவர்களின் ஜோடி நடுவர்களின் பாராட்டு மழையில் நனையாத நாளே இல்லை. டான்ஸ் என்றாலும் சுனிதாவுக்கு அவ்வளவு பிடிக்கும்.

இதையும் படிங்க.. சந்திரலேகா சீரியலில் இனி நான் இல்லை... விலகிய முக்கிய பிரபலம்!

அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றி கொண்ட சுனிதா, மொழி தெரியாமல் கஷ்டப்பட கூடாது என்ற காரணத்திற்காக முறைப்படி தமிழையும் கற்றுக் கொண்டார். முடிந்த வரை எல்லா இடங்களிலும் சரளமாக தமிழில் பேச முயற்சி செய்வார். டான்ஸில் மட்டும் ஈடுபாடு கொண்டிருந்த சுனிதாவுக்கு காமெடியும் வரும் என நிரூபிக்க வைத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. சீசன் 1, 2, 3 ல் தொடர்ந்து கோமாளியாக பட்டையை கிளப்பி வருகிறார். அவரும் அவ்வப்போது காமெடி செய்வார், அவரை வைத்தும் மற்ற கோமாளி காமெடி செய்வார்கள்.

இதையும் படிங்க.. காணாமல் போன ரோஜா குழந்தை.. துரைக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சுனிதா, ரசிகர்கள் மத்தியில் பயங்கர ட்ரெண்டானார். இவரின் இன்ஸ்டா பக்கத்தில் லைக்ஸ் குவிந்து வருகின்றன. அதுமட்டுமில்லை தனியாக யூடியூப் சேனல் தொடங்கி அதிலும் பிஸியாக வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தான் சமீபத்தில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டான்ஸர் வாங்கை சுனிதா காதலிப்பதாக பல தகவல்கள் இணையத்தில் உலா வந்தன. இதற்கு சுனிதா எந்த விளக்கமும் தரவில்லை. ஆனால் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிரபல யூடியூப் சேனல் ஒன்று,. சுனிதா ரசிகர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. அதில் வாங் சர்ப்பிரைஸ் எண்ட்ரி கொடுத்தார். பின்பு கையில் ரோஜா பூவுடன் எல்லோர் முன்னிலையிலும் சுனிதாவுக்கு லவ் புரப்போஸ் செய்தார். கையில் மோதிரம் கூட போட்டுவிட்டார். ஆனால் சுனிதா நீ எப்போதுமே என்னுடை நல்ல நண்பன் மட்டுமே என பதில் கொடுத்துவிட்டார். கடைசியில் தான் தெரிந்தது வாங் செய்தது பிராங் என்று. ஆனாலும் இந்த சம்பவம் மூலம் நீண்ட நாள் வதந்திக்கு பதில் கிடைத்துவிட்டது. சுனிதா ரசிகர்கள் ஹாப்பி!

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Cook With Comali Season 2, TV Programme, Vijay tv