விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சுந்தரி நீயும் சுந்தரனும் நானும் சீரியல் புகழ் தேஜஸ்வினி கௌடாவுக்கு பிக் பாஸ் பிரபலத்துடன் திருமணம் நடைப்பெறவுள்ளது. இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
தமிழ் சின்னத்திரையில் புது முகங்களாக தெலுங்கு, கன்னட நடிகைகளை களம் இறக்குவது சமீபகாலமாக அதிகம் நடந்து வருகிறது. ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் தொடர்களில் தமிழ் நடிகைகளை காட்டிலும் அதிகம் வேற்று மொழி பேசும் நடிகைகளே லீட் ரோலில் நடிக்கின்றனர். அந்த வகையில் கன்னடம் மற்றும் தெலுங்கு சீரியல்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பவர் தேஜஸ்வினி கௌடா. இவருக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இவரை விஜய் டிவி ,சுந்தரி நீயும் சுந்தரனும் நானும் சீரியல் மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்தது.
'முத்தழகு’ அஞ்சலியின் நிஜ கணவரை பார்த்து இருக்கீங்களா?
இவர் இந்த சீரியலில் வினோத் பாபுவுடன் இணைந்து நடித்தார். சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு இந்த சீரியல் முடிக்கப்பட்டது. வினோத் பாபு இப்போது அதே விஜய் டிவியில் பவித்ரா ஜனனியுடன் இணைந்து ‘தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியலில் நடித்து வருகிறார். தேஜஸ்வினி கௌடா தொடர்ந்து தெலுங்கு, கன்னட சீரியல்களில் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல் தமிழ் ரசிகர்களுக்காக ஜீ தமிழில் ஒளிப்பரப்பாகும் ‘வித்யா நம்பர் 1’ என்ற சீரியலிலும் லீட் ரோலில் நடிக்கிறார்.
இப்படியொரு கல்யாணமா? நட்சத்திரா கொடுத்த பதிலால் ஷாக்கான ரசிகர்கள்!
இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி புகழ் புவியரசன் நடிக்கிறார். தேஜஸ்வினி கௌடா இப்படி சீரியல்களில் மாறி மாறி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தனது ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸை ஷேர் செய்துள்ளார். அதாவது, இவருக்கும் தெலுங்கு நடிகர் அமர்தீப் சௌத்ரிக்கும் கூடிய விரைவில் திருமணம் நடைப்பெறவுள்ளது. சில தினங்களுக்கு முன்பு இவர்களின் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமில்லை தேஜஸ்வினியும் தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த தகவலை உறுதி செய்துள்ளார். தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களையும் அவர் ஷேர் செய்துள்ளார். அமர்தீப் , சீரியல் நடிகர், நடிகைகளுக்காக நடத்தப்பட்ட தெலுங்கு பிக் பாஸ் (இண்ட்லோ மா பரிவர்) நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆவார்.
இதே நிகழ்ச்சியில் தேஜஸ்வினியும் கலந்து கொண்டு 2வது இடத்தை பிடித்தார். அமர்தீப் தற்போது சீரியல் மற்றும் படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு மற்றும் கன்னட உலகில் இவருக்கு மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர்களின் திருமண அறிவிப்புக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.