Home /News /entertainment /

மாமியார் மல்லிகா கொடுத்த ஷாக்கில் கார்த்திக் ...சுந்தரி சீரியலில் அடுத்து என்ன நடக்கும்?

மாமியார் மல்லிகா கொடுத்த ஷாக்கில் கார்த்திக் ...சுந்தரி சீரியலில் அடுத்து என்ன நடக்கும்?

சுந்தரி

சுந்தரி

சுந்தரி - கார்த்திக் இருவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம் தற்போது அனுவின் அம்மாவுக்கும் தெரிந்து விட்டது.

  விஜய் டி.வி., ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் என புதிது புதிதாக எத்தனை என்டர்டெயின்மெண்ட் சேனல்கள் வந்தாலும், சன் டி.வி.க்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு குறையவே குறையாது என்பதை அதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அவ்வப்போது நிரூபித்து காட்டுகின்றன. சன் டி.வியை பொறுத்தவரை ‘பூவே உனக்காக’, ‘மகராசி’, ‘திருமகள்’, ‘சித்தி 2’, ‘பாண்டவர் இல்லம்’, ‘சந்திரலேகா’, ‘அருவி’, ‘தாலாட்டு’, ‘அபியும் நானும்’, ‘வானத்தை போல’, ‘கண்ணான கண்ணே’, ‘ரோஜா', ‘அன்பே வா’ என பல சீரியல்கள் ஏற்கனவே ஒளிபரப்பாகி வரும் நிலையில், புதிதாக ஒளிபரப்பாகி வரும் ‘சுந்தரி, ‘கயல்’, ‘எதிர்நீச்சல்’ ஆகிய சீரியல்கள் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் வெற்றிக்கொடி கட்டி வருகிறது.

  இதில் குறிப்பாக சுந்தரி சீரியல் ஆரம்பித்தில் இருந்தே டாப் கியரில் பறந்து கொண்டிருக்கிறது. டி.ஆர்.பி. ரேட்டிங்கில் மட்டுமல்ல ரசிகர்களுக்கு பிடித்த நெம்பர் ஒன் சீரியலாகவும் உள்ளது. இதில் டிக்டாக், டப் மேஷ், இன்ஸ்டாகிராம் போன்ற சோசியல் மீடியாக்களில் பிரபலமாக வலம் வந்த கேப்ரியெல்லா செல்லஸ் ‘சுந்தரி’ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுந்தரியின் கணவர் கார்த்திக் கதாபாத்திரத்தில் ஜிஷ்ணு மேனன் என்பவரும், அவரது இரண்டாவது மனைவி அனு கதாபாத்திரத்தில் ஸ்ரீகோபிகா நீலநாத் என்பவரும் நடித்து வருகின்றனர்.

  ஸ்ரேயா இல்லனா தப்பான வழியில் போயிருப்பேன்.. சீரியல் நடிகர் சித்து உருக்கம்!

  பிரமி வெங்கட் என்பவர் அனுவின் அம்மா மல்லிகா கதாபாத்திரத்திலும், சன் தொலைக்காட்சி சீரியல்களில் பிரபலமான மனோகர் கிருஷ்ணன் சுந்தரியின் மாமா கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். மின்னல் தீபா, இந்துமதி, வரலக்ஷ்மி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கறுப்பு நிறம் கொண்ட பெண்ணான சுந்தரி கலெக்டருக்கு படிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். ஆனால் தனது தாய்மாமா முருகனுக்காக அவரது மனைவியின் தம்பியான கார்த்திக்கை திருமணம் செய்து கொள்ள வேண்டி வருகிறது.

  சுந்தரி கறுப்பாக இருப்பதால் கார்த்திக் அவளை அடியோடு வெறுக்கிறார். மேலும் யாருக்கும் தெரியாமல் தான் காதலித்து வந்த அனுவை திருமணம் செய்து கொள்கிறார். இந்த விஷயம் இதுவரை யாருக்கும் தெரியாமல் இருந்து வந்த நிலையில், சுந்தரிக்கு தெரிந்துவிட்டது. ஆனால் அனுவின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்பதற்காக கார்த்திக்கை காட்டி கொடுக்காமல் சுந்தரி அமைதியாக இருக்கிறாள்.

  ஸ்ரேயா இல்லனா தப்பான வழியில் போயிருப்பேன்.. சீரியல் நடிகர் சித்து உருக்கம்!

  சுந்தரி - கார்த்திக் இருவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம் தற்போது அனுவின் அம்மாவான மல்லிகாவிற்கும் தெரிந்துவிட்டது. மல்லிகா சுந்தரியின் தியாகத்தை மதித்து, அவருக்கு தனது நிறுவனத்தில் சிஇஓவாக பதவி உயர்வு அளிக்கிறார். இதிலும் இடையில் புகுந்து ஆட்டையை களைக்கும் கார்த்திக், சுந்தரியை சிஇஓ போஸ்டிக் தேவையில்லை என சொல்ல வைக்கிறார். இதுவரை சுந்தரி சீரியல் ஒளிபரப்பாகியுள்ள நிலையில், தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

  அதில், சுந்தரி வீட்டிற்கே செல்லும் மல்லிகா, அவர்களிடம் சிஇஓவாக விருப்பமில்லை என சுந்தரி சொல்லிவிட்டதை தெரிவிக்கிறார். குடும்பத்தினர் அனைவரும் எங்களுக்கு இதில் விருப்பம் இருந்தாலும், சுந்தரியின் கணவருக்கு உடன்பாடு இல்லை என தெரிவிக்கின்றனர். உடனே தானே சுந்தரியின் கணவரை சமாதானம் செய்வதாக சொல்லி, முருகனை போன் செய்ய வைக்கிறார்.தனது அக்கா கணவரின் போனில் மாமியார் மல்லிகாவின் குரலைக் கேட்கும் கார்த்திக் திகைப்போகிறார். இனி கார்த்திக் என்ன முடிவெடுப்பார், மல்லிகா அம்மா சுந்தரியை சம்மதிக்க வைப்பாரா? போன்ற எதிர்பார்ப்பை புரோமோ வீடியோ தூண்டியுள்ளது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, TV Serial

  அடுத்த செய்தி