Home /News /entertainment /

செம்ம ஹாப்பியில் சுந்தரி கேப்ரில்லா... சீரியல் குழு சொன்ன குட் நியூஸ்!

செம்ம ஹாப்பியில் சுந்தரி கேப்ரில்லா... சீரியல் குழு சொன்ன குட் நியூஸ்!

சுந்தரி கேப்ரில்லா

சுந்தரி கேப்ரில்லா

மற்றொரு சன் டிவி சீரியல் ஒன்று கயல் சீரியலை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.

    டிஆர்பி வரிசையில் எப்போதும் சன் டிவி சீரியல்களும், விஜய் டிவி சீரியல்களும் போட்டிபோட்டுக் கொண்டு முன்னிலை வகிக்கும். வித்தியாசமான மற்றும் விறுவிறுப்பான கதைக்களத்தை அமைப்பதன் மூலம் இரு சேனல்களின் சீரியல்களும் சின்னத்திரை ரசிகர்களை தங்கள் பக்கம் கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் டிஆர்பி-யில் சன் டிவி சீரியல்களும், விஜய் டிவி சீரியல்களும் மாறி மாறி முதலிடம் பிடிப்பது வழக்கம்.

    அதிலும், சன் டிவி சீரியல்கள் அனைத்தும் ரசிகர்களை கவரும் விதத்தில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சன் டிவி-யின் இந்த ஒரு சீரியல் மட்டும் வேறு எந்த சீரியலுக்கும் இடம் கொடுக்காமல் முதலிடத்தை தன்வசம் வைத்திருந்தது. இதனால், சீரியல் குழு சந்தோஷத்தில் இருந்து வந்தனர். அது வேறு எந்த சீரியலும் இல்லை.

    சமீபத்தில் தொடங்கப்பட்ட கயல் சீரியல் தான். இந்த சீரியல் ஒளிபரப்பான சில நாட்களிலேயே சின்னத்திரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்த சீரியலில் கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற ஹிட் சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பின்னர் அதே சேனலில் காற்றின் மொழி என்ற சீரியலில் நடித்து வந்தார். பின்னர் எதோ சில காரணங்களால் சீரியல் நிறுத்தப்பட்டது.

    இதையும் படிங்க.. கண்ணம்மாவுக்கு பாரதி போட போகும் கண்டிஷன் இதுதான்.. ரசிகர்களின் கணிப்பு சரியா?

    ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்து கலக்கிய சைதன்யா தான், கயல் சீரியலில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே உள்ள ரசிகர்கள் பட்டாளம் காரணமாக சீரியல் ஒளிபரப்படுவதற்கு முன்னரே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியது. இந்நிலையில் மேலும் எதிர்பார்ப்பை கூட்டும் அளவுக்கு கதைக்களத்தை மெருகேற்றி வருகிறது கயல் சீரியல்.

    இதனால் அனுதினமும் கயல் சீரியலை பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதன் காரணமாக சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் டாப்பில் இருக்கிறது. அத்துடன் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்கிலும் சன் டிவியின் கயல் சீரியல் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்தது. அதிலும், எப்போதும் முதலிடம் பிடிக்கும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளிய முதல் சீரியல் என்ற பெருமையை கயல் சீரியல் பெற்றது. இந்த நிலையில், தற்போது மற்றொரு சன் டிவி சீரியல் ஒன்று கயல் சீரியலை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.

    இதையும் படிங்க.. என்ன தாமரை இதெல்லாம்? ஷாக்கான ரசிகர்கள்! வைரலாகும் தாமரை செல்வியின் டான்ஸ் வீடியோ

    நடிகை கேப்ரில்லா செல்லஸ் நடித்து வரும் "சுந்தரி" சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் டாப்பில் உள்ளது. இரண்டு திருமணம் செய்துகொண்டு அதனை மறைத்து வந்த கதாநாயகன் சீரியல் நாயகியிடம் மாட்டுக்கொண்டு அல்லாடும் விறுவிறுப்பான எபிசோடுகள் இப்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இந்த சீரியல் தற்போது டிஆர்பி-யில் முன்னிலை வகிக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி