• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • எந்த நிறத்தால் புறக்கணிக்கப்பட்டாரோ அதே நிறத்தால் கிடைத்த வாய்ப்பு.. அவமானத்தை மறக்க செய்த சுந்தரியின் வெற்றி!

எந்த நிறத்தால் புறக்கணிக்கப்பட்டாரோ அதே நிறத்தால் கிடைத்த வாய்ப்பு.. அவமானத்தை மறக்க செய்த சுந்தரியின் வெற்றி!

சுந்தரி கேப்ரில்லா

சுந்தரி கேப்ரில்லா

திறமை இருந்தும் நிறத்தை காரணம் காட்டி அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது.

  • Share this:
    டிக் டாக் மூலம் கிடைத்த வாய்ப்பினால் வெள்ளித்திரை, சின்னத்திரை என பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் சுந்தரி சீரியல் கேப்ரில்லா பற்றி பலருக்கும் தெரியாத விஷயங்கள்.

    டஸ்கி ஸ்கின்.. கலரெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என்று மேலோட்டமாக சொல்லிவிட்டு சென்றாலும் இன்று வரை எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் பெண்கள் மீது நிறம் குறித்த பார்வை திணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அதிலும் சினிமாவில் முதலில் அவர்களின் தோற்றம் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதுப்போன்ற விமர்சனங்களை கடந்து வந்து தான் இன்று ஜெயித்தாக முன்னணி நடிகைகள் பலர் தெரிவித்துள்ளனர். ஐஸ்வர்யா ராஜேஷ் கூட தனது நிறம் குறித்த விமர்சனங்களை ஒருமுறை பகிர்ந்திருந்தார். இந்நிலையில் நிறம் தான் தனக்கு வெற்றியை வாங்கி தந்துள்ளதாக சன் டிவி சீரியல் சுந்தரி புகழ் கேப்ரில்லா கூறுகிறார்.

    டிக் டாக் மூலம் தான் கேப்ரில்லாவுக்கு சினிமா வாய்ப்பே கிடைத்தது. 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் தனது காமெடி திறமையை வெளிப்படுத்த மேடை ஏறினார். இவர் டிடி மாதிரி சிரித்து காட்டுவதில் வல்லவர். ஆனால் இறுதிச்சுற்றுக்கு முன்பே கேப்ரில்லா வெளியேறினார். தொடர்ந்து டிக் டாக்கில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வந்தவர் சினிமா மற்றும் சின்னத்திரையில் வாய்ப்புகள் தேடி அலைந்தார். அப்போதெல்லாம் அவரிடம் திறமை இருந்தும் நிறத்தை காரணம் காட்டி அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் திறமை ஒருநாள் கண்டிப்பாக ஜெயிக்கும் என நம்பியவருக்கு நயன்தாராவின் ஐரா பட வாய்ப்பு தேடி வந்தது. அந்த படத்தில் நயன் தாராவின் சிறுவயது கதாபாத்திரத்தில் கேப்ரில்லா நடித்திருந்தார். அந்த படத்தில் அவரின் நடிப்பு பாராட்டுக்களை வாங்கி தந்தது. அதன் பின்பு அவரின் வாழ்க்கையையே தலைகீழாக மாறியது.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    Gabriella sellus இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@gabrellasellus_official)






    தொடர்ந்து பல படங்களில் துணை ரோல்களில் நடித்தார். இந்நிலையில் அவருக்கு ஒளிப்பதிவாளர் உடன் காதல் திருமண நடைப்பெற்றது. இந்த ஃபோட்டோக்கள் இணையத்தில் வைரலானது. அவ்வளவு தான் சினிமாவில் இனி கேப்ரில்லா நடிக்க மாட்டார் என நினைத்த நேரத்தில் தான் சன் டிவியில் சுந்தரி சீரியலில் லீட் ரோல் என்ட்ரி கொடுத்தார். இந்த கதாப்பாத்திரமும் நிறத்தால் பின் தங்காமல் சாதிக்கும் சுந்தரி என்ற பெண்ணின் சுயமரியாதை கதை தான். இந்த வாய்ப்பையும் கேப்ரிலாவுக்கு வாங்கி கொடுத்தது அவரின் நிறம் தான். தற்போது நடிப்பில் கலக்கி வரும் கேப்ரில்லா இன்ஸ்டாவில் படு ஆக்டிவ். அவ்வப்போது லைவிலும் கலந்துரையாடுவார். ரீல்ஸ்களை வெளியிடுவார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: