நிறத்தை வைத்து விமர்சிக்கப்பட்ட சுந்தரி சீரியல் கேப்ரில்லா மற்றும் பாரதி கண்ணம்மா வினுஷாவுக்கு வெள்ளித்திரையில் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சின்னத்திரையின் பிளாக் பியூட்டியாக ஜொலித்து கொண்டிருப்பவர்கள் கேப்ரில்லா மற்றும் வினுஷா. டிக் டாக் மூலம் புகழடைந்த கேப்ரிலா இப்போது சன் டிவியில் சுந்தரி சீரியலில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் சன் டிவியின் மெகா ஹிட் சீரியல் ஆகும். இதில் இவரின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றுள்ளது. இதற்காக சன் குடும்ப விருதையும் கேப்ரில்லா வாங்கினார். டி.ஆர்.பியில் சுந்தரி சீரியல் கலக்கி கொண்டிருக்கிறது. அதற்கு கேப்ரில்லாவின் நடிப்பு மிக முக்கியமான காரணம் என்றே கூறலாம். இந்த வெற்றிக்கு பின்பு கேப்ரில்லா அளித்த பல பேட்டியில் ஆரம்பத்தில் தனது நிறத்தால் பல வாய்ப்புகளை இழந்ததாக கூறியிருந்தார். ஆனால் இன்று அதே நிறம் தான் அவருக்கு சுந்தரி ரோலை வசப்படுத்தியது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
COOK WITH COMALI : இந்த வார எபிசோடில் செம்ம சர்ப்ரைஸ் இருக்கு!
அதே போல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் மெகா ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மாவில் புது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். இவரும் டிக் டாக் பிரபலம் தான். பாரதி கண்ணம்மாவில் ரோஷினியின் விலகலுக்கு பின்பு வினுஷா தான் பாரதி கண்ணம்மா கப்பலை மீட்டு அதில் சவாரி செய்து வருகிறார். இவரும் தனது நிறத்தால் பல கேலி, கிண்டல்களை சந்தித்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அந்த தகவல் பொய், நம்பாதீங்க.. ரசிகர்களிடம் கேட்டு கொண்ட பிக் பாஸ் ராஜூ!
இந்நிலையில் கேப்ரில்லா - வினுஷா இருவரும் வெள்ளித்திரையில் ஒன்றாக களம் இறங்குகின்றனர். இருவரும் இணைந்து கதாநாயகியாக N4 என்ற படத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப்படத்தில் இவர்கள் இருவரும் மீனவப் பெண்களாக நடித்திருக்கின்றனர் என்ற தகவலும் தற்போது வெளியாகியுள்ளது,. இவர்களுடன் மைக்கேல், தர்மதுரை, அனுபமா குமார், அபிஷேக் சங்கர், வடிவுக்கரசி, அழகு உள்ளிட்ட பல நடிகர்களும் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.
இந்த படம் முழுக்க முழுக்க காசிமேடு பகுதியில் வாழும் மீனவர்களின் வாழ்வியலை சொல்லும் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலும் வைரலாகி வருகிறது. இந்த படத்தின் போஸ்டரை கேப்ரில்லா மற்றும் வினுஷா இருவரும் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளனர். இதற்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறியுள்ளனர். சின்னத்திரையில் கலக்கும் இருவரும் வெள்ளித்திரையிலும் ஜொலிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.