டிக் டாக் மூலம் கிடைத்த வாய்ப்பினால் சின்னத்திரைக்கு நுழைந்த கேப்ரில்லா இப்போது முன்னணி சின்னத்திரை நடிகை. லைவ் ஆர்டிஸ்ட் என பெயர் வாங்கிய கேப்ரில்லாவின் இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘சுந்தரி’ சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் கேப்ரில்லா விஜய் டிவியின் காமெடி ஷோ சிலவற்றிலும் நடித்து இருக்கிறார். இவர் நடித்து வரும் இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. மக்களின் நேரடி ஆதரவை இந்த சீரியல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சுந்தரியாக நடிக்கும் கேப்ரில்லா இதற்கு முன்பு விஜய் டிவி உள்ளிட்ட சில தொலைக்காட்சிகளில் ரியாலிட்டி நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.சமூக வலைதளங்களில் குடும்ப பாங்கான கோணங்களில் இவர் அவ்வபோது வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
நீளமான முடியை கொண்ட பேரன்பு சீரியல் நடிகை வானதி!
மேலும் இவர் சில குறும் படங்களிலும் நடித்துள்ளார். இதன் மூலமும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அதே போன்று இன்ஸ்டாகிராமில் சிறந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை இவர் அவ்வப்போது பதிவேற்றி வருவார். மக்களிடையே இவருக்கு கிடைத்த ஆதரவை கொண்டு சன் டிவியின் பிரபல சீரியலில் நடிக்க கூடிய வாய்ப்பை பெற்றார். அதன்படி சுந்தரி சீரியல் மூலம் பலருடைய மனதில் இடம்பிடித்துள்ளார் கேப்ரில்லா.
புடவையை விட 'ராஜா ராணி' ரியா மாடர்ன் ட்ரெஸ்ஸில் ரொம்ப அழகு!
சீரியல்களுக்கான சூட்டிங், சமூக வலைதளங்களில் வெளியிடும் பதிவுகள் என எப்போதும் இடைவிடாமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் கேப்பிரில்லா செல்லஸ் ‘தியேட்டர் ஃபேக்டரி’ என்ற நாடகக் குழு ஒன்றையும் தொடங்கியுள்ளார். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் சமூகவலைத்தளத்தில் நேரத்தை செலவிடுகிறார். ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடுவது, சீரியல் அப்டேட் கொடுப்பது என கேப்ரில்லா இன்ஸ்டாவில் செம்ம பிஸி. தற்போது இவர் வெள்ளித்திரையில் லீட் ரோலில் நடித்து வருகிறார்.
View this post on Instagram
இந்நிலையில் கேப்ரில்லா, சுந்தரி சீரியலில் கிருஷ்ணாவாக நடிக்கும் நடிகர் அர்விஷ் உடன் அவ்வப்போது டான்ஸ் ஆடி ரீல்ஸ் வீடியோவை வெளியிடுவார். இதற்கு லைக்ஸ் குவியும். அப்படி தற்போது இன்ஸ்டாவில் ட்ரெண்டிங்கில் இருக்கும் அஞ்சலி குத்தாட்டம் போட்ட ரா ரா பாடலுக்கு அர்விஷ் நடனம் ஆட, கேப்ரில்லாவும் ஆசையுடன் ஓடி சென்று ஆடுகிறார். ஆனால் அப்போது அவரின் ஜவுரி முடி கழன்று கீழே விழுந்து விடுகிறது. இதை எதிர்பார்க்காத கேப்ரில்லா ஷாக்கில் டான்ஸ் ஆடாமல் பாதியில் நின்று விடுகிறார்.
பின்பு அரவிஷ் அந்த ஜவுரி முடியை எடுத்து கேமராவில் எல்லோருக்கும் காட்டுகிறார். சுந்தரிக்கு ஒரே வெட்கம் தான். இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.