Home /News /entertainment /

என்னை மன்னித்து விடு.. கணவரிடம் மன்னிப்பு கேட்ட சுந்தரி கேப்ரில்லா!

என்னை மன்னித்து விடு.. கணவரிடம் மன்னிப்பு கேட்ட சுந்தரி கேப்ரில்லா!

சுந்தரி கேப்ரில்லா

சுந்தரி கேப்ரில்லா

சுந்தரி கேப்ரில்லாவின் கணவர், ஒரு ஒளிப்பதிவாளர் ஆவார். இவர்களது திருமணம், காதல் திருமணம் ஆகும்.

  நிறம் காரணமாக சினிமா மற்றும் வெள்ளித் திரையில் நுழைவதற்கு பெரும் சிரமங்களை எதிர்கொண்டவர் கேப்பிரில்லா செல்லஸ். ஆனால் திறமை ஒருநாள் கண்டிப்பாக ஜெயிக்கும் என நம்பியவருக்கு நயன்தாராவின் ஐரா பட வாய்ப்பு தேடி வந்தது. அந்த படத்தில் அவரின் நடிப்பு பாராட்டுக்களை வாங்கி தந்தது. அதன் பின்பு அவரின் வாழ்க்கையையே தலைகீழாக மாறியது.தொடர்ந்து பல படங்களில் துணை ரோல்களில் நடித்தார். சன் டிவியில் சுந்தரி சீரியலில் லீட் ரோல் என்ட்ரி கொடுத்தார்.

  இந்த கதாப்பாத்திரமும் நிறத்தால் பின் தங்காமல் சாதிக்கும் சுந்தரி என்ற பெண்ணின் சுயமரியாதை கதை தான் . சுந்தரி சீரியலில் இது அப்படியே கதைக்களமாக பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. சீரியலில் சுந்தரி என்ற பெயரில் வரும் இந்த பெண் கருப்பாக இருப்பதால் மிகுந்த கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளாகிறார். இருந்தாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல், தனது லட்சியத்தை நோக்கி நடை போடுகிறார் அவர். சுந்தரி மிகவும் திறமையான, துடிப்பான பெண் என்பதால், அனைத்து விதமான தடைகளையும் தகர்த்து எறிந்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து செல்கிறார். நிஜத்திலும் கேப்பிரில்லா செல்லெஸ் அப்படித்தானே இருக்கிறார்.

  தமிழ் சினிமாவின் பாசக்கார அம்மா ... நடிகை சரண்யா பொன்வண்ணன் பிறந்தநாள் ஸ்பெஷல்!

  வெள்ளித்திரை மட்டுமல்லாமல், திரைப்படங்களில் கேப்பிரில்லா அவ்வபோது நடித்து வருகிறார். இந்த வாய்ப்பையும் கேப்ரிலாவுக்கு வாங்கி கொடுத்தது அவரின் நிறம் தான். தற்போது சுந்தரி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக கேப்ரில்லாவின் நடிப்பு பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.சமீப காலமாக டிவி சீரியல் டி.ஆர்.பியில் 2வது இடத்தை பிடிக்கும் சன் டிவி சீரியல் ,சுந்தரி தான்.

  சீரியலை தாண்டி கேப்ரில்லா சோஷியல் மீடியாவில் பயங்கர பிஸி. அடிக்கடி ஃபோட்டோ ஷூட், ரிலீஸ் வீடியோக்களை வெளியிடுவார். அவ்வப்போது இன்ஸ்டா லைவிலும் ரசிகர்களுடன் உரையாடுவார். சமீபத்தில் ஏ. ஆர் ரகுமானின் மூப்பில்லா தமிழ் தாயே பாடலிலும் சில வரிகளை பாடியுள்ளார். இதுவும் அவருக்கு மிகப் பெரிய பெயரை வாங்கி தந்துள்ளது. இந்நிலையில், சுந்தரி கேப்ரில்லா தனது கணவரிடம் பகிரங்கமாக இன்ஸ்டாவில் மன்னிப்பு கேட்டுள்ளார். எதற்கு தெரியுமா?

  RRR படத்தை விடுங்க..1990ல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ’வைஜெயந்தி ஐ.பி.எஸ்’ பற்றி தெரியுமா?

  சமீபத்தில் நடந்து முடிந்த சன் டிவி குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் சுந்தரி சிரியலுக்காக கேப்ரில்லா செல்லஸூக்கு பேவரைட் ஹீரோயின் கேட்டகிரியில் விருது வழங்கப்பட்டது. அந்த விருது மேடையில் தனது அம்மா மற்றும் அம்மாச்சி பற்றி கேப்ரில்லா பேசி இருக்கிறார். ஆனால் தனது காதல் கணவரை பற்றி பதற்றத்தில் பேச மறந்துவிட்டார் போல. அதற்கு மன்னிப்பு கூறி தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார். அதற்கு அவரின் கணவர், ”உண்மையை தானா சொல்ல முடியும், அம்மா அம்மாச்சி பற்றி பேசியது சரியே” என்கிறார். அதற்கு சுந்தரி, ”நீ தான் என் வாழ்நாள் விருது” என கூறி காதலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
  இந்த போஸ்ட் கேப்ரில்லா ரசிகர்களிடம் அதிக லைக்ஸ்களை வாங்கி வருகிறது. பலரும்  இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். கேப்ரில்லாவின் கணவர், ஒரு ஒளிப்பதிவாளர் ஆவார். இவர்களது திருமணம், காதல் திருமணம் ஆகும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja
  First published:

  Tags: Sun TV, TV Serial, Vijay tv

  அடுத்த செய்தி