சன் டிவி வானத்தைப் போல சீரியல் பிரபலத்தின் கார் விபத்தில் சிக்கியுள்ளது.
மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சன் டிவி-யின் தொடர்களில் ஒன்று வானத்தைப் போல. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் தேதி முதல் இந்த சீரியல் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அண்ணன்-தங்கை பாசத்தை எடுத்துரைக்கும் விதத்தில் இதன் கதைக்களம் அமைந்துள்ளதால் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.
இதில் துளசி என்ற கதாபாத்திரத்தில் ஸ்வேதா என்பவரும், சின்ராசு வேடத்தில் தமன் என்பவரும் நடித்து வந்தார்கள். அவர்களின் கதாபாத்திரங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றன. ஆனால் பாதியிலேயே அவர்கள் வானத்தைப் போல சீரியலில் இருந்து விலகினர்.
நடிகர் விஜய்யா இது? வைரலாகும் சின்னத்திரை நடிகரின் திருமண போட்டோ!
இதில் வெற்றி காதாபாத்திரத்தில் அஸ்வந்த் திலக்கும், துளசியாக மான்யா ஆனந்த், சந்தியாவாக தேப்ஜனி மோடக், கார்த்தியாக ராஜபாண்டி துரைசாமி, விஷ்வாவாக தரிஷ் ஜெயசீலன், சங்கர பாண்டியாக மகாநதி சங்கர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். சீரியலின் முக்கிய கதாபாத்திரமான சின்னராசு என்ற லீடிங் கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்ரீகுமார் நடித்து வருகிறார். வானத்தைப் போல சீரியலில் முத்தையாவாக நடித்து வருபவர் இயக்குநர் மனோஜ் குமார்.
ராஜா ராணி 2 சித்து மனைவி ஷ்ரேயாவுடன் வாங்கிய பிரம்மாண்ட கார் - விலையை கேட்டா அசந்து போவீங்க!
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த இவருக்கு தற்போது வயது 67. இவர் பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் உறவினரும் கூட. மனோஜ் குமார் நேற்று காலை மாருதி சுசூகி காரில் தனது மனைவி செல்வி, உதவியாளர் ரகுபதி ஆகியோருடன் தேனிக்கு புறப்பட்டார்.
எப்படி இருந்த விஜயகாந்த் இப்படி ஆகிட்டாரே... அதிர்ச்சியைக் கிளப்பும் புகைப்படம்

மனோஜ் குமார்
அப்போது காரை ரகுபதி ஓட்டினார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தனியார் கல்லுாரி அருகே காலை 10 மணியளவில் கார் வந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த மூன்று பேரும் காயமடைந்தனர். பின்னர் அங்குள்ளவர்கள் காயமடைந்த மூவரையும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.