Home /News /entertainment /

சன் டிவி வானத்தை போல சீரியலுக்கு வந்த சோதனை.. இனி அந்த நடிகை நடிக்க மாட்டார்!

சன் டிவி வானத்தை போல சீரியலுக்கு வந்த சோதனை.. இனி அந்த நடிகை நடிக்க மாட்டார்!

வானத்தை போல

வானத்தை போல

வானத்தை போல துளசி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையின் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சன் டிவியில் தொடர்களில் ஒன்று தான் வானத்தைப்போல. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி முதல் சன் டிவியில் ஒளிபரப்பட்டு வரும் வானத்தை போல சீரியல் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அண்ணன்-தங்கை பாசத்தை எடுத்துரைக்கும் விதத்தில் இதன் கதைக்களம் அமைந்துள்ளதால் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.

    இதில் வெற்றி காதாபாத்திரத்தில் திலக்கும், துளசியாக ஸ்வேதா கெல்கே, சந்தியாவாக தேப்ஜனி மோடக், கார்த்தியாக ராஜபாண்டி துரைசாமி, விஷ்வாவாக தரிஷ் ஜெயசீலன், சங்கர பாண்டியாக மகாநதி சங்கர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். குறிப்பாக இந்த சீரியலில் அண்ணன் சின்னராசு என்ற லீடிங் கதாபாத்திரத்தில் நடிகர் தமன் குமார் நடித்து வருகிறார்.

    இந்த சீரியலின் துளசி-சின்ராசு கேரக்டர்கள் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டுள்ளது என்றே சொல்லலாம். சினிமாவில் நடித்ததை விட சின்ராசு கதாபாத்திரத்தில் நடிக்கும் தமன் குமார் தற்போது அதிகம் மக்களிடம் ரீச் ஆகியுள்ளார். அதேபோல, துளசி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்வேதாவுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இந்நிலையில் தற்போது துளசி கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஸ்வேதா சீரியலில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஸ்வேதா கர்நாடகாவை சேர்ந்தவர் ஆவார். இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை பெங்களூரூவில் முடித்துள்ளார். மேலும், ஐடி துறையில் பணியாற்றி வந்த இவர் நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் முதலில் மாடலிங் செய்து கொண்டிருந்தார். பின் சீரியலில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவர் முதன்முதலாக கலர்ஸ் கன்னடா சேனலில் ஒரு சீரியலில் நடித்தார். அதன்பிறகு 2019ஆம் ஆண்டு ஜெமினி டிவியில் மதுமாசம் என்ற தெலுங்கு சீரியலில் நடித்தார். இந்த சீரியல் சூப்பர் ஹிட்டானது. இதன் மூலம் தெலுங்கு படத்திலும் ஸ்வேதா நடித்தார்.



     




    View this post on Instagram





     

    A post shared by SWETHA KHELGE (@swetha_khelge)






    இதனை தொடர்ந்து இவர் குறும்படங்கள், ஆல்பம் சாங் எனப் பலவற்றிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அதன்பிறகு இவருக்கு சன் டிவி சீரியலில் நடிக்க வாய்ப்புக்கிடைத்தது. இருப்பினும், சில மாதங்களாகவே இவர் சீரியலில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில், சீரியலில் இருந்து விலகுவதாக அவரே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அவருக்கு பதிலாக தற்போது துளசி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையின் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த சீரியலில் ராஜபாண்டி காதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்தியுடன் புதிய துளசி இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. சீரியலில் இருந்து ஸ்வேதா ஏன் விலகினார் என்பதற்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி