Home /News /entertainment /

ரசிகர்களை நம்பி சன் டிவி ‘வானத்தை போல’ அண்ணன் சின்ராசு எடுத்த முடிவு.. கைக்கொடுக்குமா?

ரசிகர்களை நம்பி சன் டிவி ‘வானத்தை போல’ அண்ணன் சின்ராசு எடுத்த முடிவு.. கைக்கொடுக்குமா?

வானத்தை போல சின்ராசு

வானத்தை போல சின்ராசு

வானத்தை போல சீரியலில் அண்ணன் சின்ராசு என்ற லீடிங் கதாபாத்திரத்தில் நடிகர் தமன் குமார் நடித்து வருகிறார்.

    மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சன் டிவியில் தொடர்களில் ஒன்று தான் வானத்தைப்போல. கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தேதி முதல் சன் டிவியில் ஒளிபரப்பட்டு வரும் வானத்தை போல சீரியல் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அண்ணன்-தங்கை பாசத்தை எடுத்துரைக்கும் விதத்தில் இதன் கதைக்களம் அமைந்துள்ளதால் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.

    இதில் வெற்றி காதாபாத்திரத்தில் திலக்கும், துளசியாக ஸ்வேதா கெல்கே, சந்தியாவாக தேப்ஜனி மோடக், கார்த்தியாக ராஜபாண்டி துரைசாமி, விஷ்வாவாக தரிஷ் ஜெயசீலன், சங்கர பாண்டியாக மகாநதி சங்கர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். குறிப்பாக இந்த சீரியலில் அண்ணன் சின்ராசு என்ற லீடிங் கதாபாத்திரத்தில் நடிகர் தமன் குமார் நடித்து வருகிறார்.

    இந்த சீரியலின் துளசி-சின்ராசு கேரக்டர்கள் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டுள்ளது என்றே சொல்லலாம். சினிமாவில் நடித்ததை விட சின்ராசு கதாபாத்திரத்தில் நடிக்கும் தமன் குமார் தற்போது அதிகம் மக்களிடம் ரீச் ஆகியுள்ளார். இவரை வெள்ளித்திரையில் பலர் பார்த்திருக்கலாம். இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் வெள்ளித்திரையில் முதன்முதலில் 2011ல் படித்துறை என்ற படத்தில் நடித்தார்.

    ஆனால் அந்த படம் ரிலீஸாகவில்லை. பிறகு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சட்டம் ஒரு இருட்டறை படத்தில் ஹீரோவாக நடித்தார். இந்த படம் ரசிகர்களிடையே ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அதன் பிறகு சும்மா நச்சுனு இருக்கு, தொட்டால் தொடரும், சேது பூமி, புயலா கிளம்பி வரோம், 6 அத்தியாயம், நேத்ரா என போன்ற சில படங்களில் நடித்திருந்தார். ஆனால் எந்த படங்களும் இவருக்கு கைகொடுக்கவில்லை.

    பல படங்களில் நடித்தும் வெற்றி கிடைக்காத நிலையில் இவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதலில் தயங்கிய இவர் பிறகு சன் டிவி என்றவுடன் துணிந்து நடிக்க வந்தார். இப்போது இவர் மக்களின் பாசக்கார சின்ராசு அண்ணனாகவே மாறிவிட்டார். அந்தளவுக்கு இவரின் நடிப்பிற்கு நல்ல ரீச் கிடைத்துள்ளது. படங்கள் மூலம் கிடைக்காத வெற்றியை இந்த சீரியல் தமனுக்கு கிடைத்துள்ளது என்றால் அது மிகையாகாது.

    தற்போது இவர் கண்மணி பாப்பா, யாழி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த படங்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது தெரியவில்லை. தமன்குமார் சில டெலிஃபிலிம்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் தமன் நடித்த "கண்மணி பாப்பா" என்ற படம் குறித்த ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை ஸ்ரீமணி இயக்கியுள்ளார்.

    விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு வழக்கு

    இந்தப் படத்தில் தமன்குமாருடன் மியாஸ்ரீ, மானஸ்வி, சிங்கம் புலி, உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சின்னத்திரையில் கிடைத்த வரவேற்பு பெரிய திரையிலும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Sun TV

    அடுத்த செய்தி