ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

சுந்தரி சீரியலில் களை கட்டப்போகும் திருவிழா.. கார்த்திக்கிற்கு பூஜை நடக்குமா?

சுந்தரி சீரியலில் களை கட்டப்போகும் திருவிழா.. கார்த்திக்கிற்கு பூஜை நடக்குமா?

சுந்தரி சீரியல்

சுந்தரி சீரியல்

Sun Tv Sundari Serial : சுந்தரி சீரியலின் லோட்டஸ்ட் ப்ரமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

சின்னத்திரையில் முன்னணியில் இருக்கும் சேனல்கள் விதவிதமான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி ரசிகர்களை ஈர்க்கும் நிலையில், மறுபக்கம் வெள்ளித்திரையை போல பல கதைக்களங்களில் எடுக்கப்பட்டு வரும் சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்களை டிவி முன் உட்கார வைக்கின்றன.

தமிழில் முன்னணியில் உள்ள சேனல்கள் அனைத்தும் தங்களுக்கென பிரேத்யேகமாக OTT அல்லது வீடியோ ஆன் டிமாண்ட் சர்விஸ் ஆப்ஸ்களை வைத்திருந்தாலும் கூட, டிவி-யில் சீரியல் ஒளிப்பரப்பாகும் பொது குடும்பத்தினருடன் அமர்ந்து சீரியல் பார்ப்பதையே சின்னத்திரை ரசிகர்கள் வழக்கமாக வைத்து உள்ளனர். தவிர்க்க முடியாத காரணங்களால் சீரியல்கள் பார்க்க முடியாமல் போகும் போது மட்டுமே ஆப்ஸை பயன்படுத்தியோ அல்லது வேறு வேறு வெப்சைட்களில் அப்லோட் செய்யப்படும் சீரியல் எபிசோட்களை பார்த்து மகிழ்கின்றனர்.

தமிழகத்தை பொறுத்த வரை பல சேனல்கள் இருந்தாலும் சீரியல்கள் என்று வந்து விட்டால் சன் டிவி தான் நேயர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் சேனலாக இருந்து வருகிறது. சன் டிவி-யில் காலை துவங்கி இரவு வரை டஜனுக்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இதில் கொரோனா காலத்தில் மீண்டும் ஒளிபரப்ப துவக்கப்பட்ட சில பழைய சீரியல்களும் அடங்கும். புதிய சீரியல்கள் என்றால் பூவே உனக்காக, மகராசி, திருமகள், சித்தி 2, பாண்டவர் இல்லம், சந்திரலேகா, அருவி, தாலாட்டு, அபியும் நானும், கயல், வானத்தை போல, கண்ணான கண்ணே, ரோஜா, எதிர்நீச்சல், அன்பே வா உள்ளிட்ட பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது சன் டிவி.

இரவு 7 - 7.30 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் TRP ரேட்டிங்கில் டாப் 5-க்குள் இடம் பிடித்து தொடர்ந்து மக்கள் மனதை கவர்ந்த சூப்பர் ஹிட் சீரியலாக இருந்து வருகிறது. சுந்தரி (நடிகை கேப்ரியெல்லா செல்லஸ்), அனுவின் கம்பெனிக்கு CEO ஆகிவிட்ட நிலையில், இவர்கள் இருவரது கணவனான கார்த்தி எப்போதும் கடுப்பாகவே காணப்படுகிறான். அனுவிற்கு சுந்தரியின் கணவன் தான் கார்த்தி என்பது தெரியாது. ஆனால் சுந்தரிக்கு அனுவை கார்த்தி ஏமாற்றி வருவது நன்கு தெரியும். இருந்தும் அனு கர்ப்பமாக இருப்பதாலும் தனது நலம் விரும்பி என்பதாலும் சுந்தரி தற்போதைக்கு விஷயத்தை மூடி மறைத்து வருகிறாள்.

also read : இவருடன் டேட்டிங் செல்வது மிகவும் கடினம்... யாரை சொல்கிறார் பிரியா பவானி சங்கர்?

இதனிடையே சுந்தரி சீரியலின் லோட்டஸ்ட் ப்ரமோ தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் கார்த்தியின் அக்கா கணவரான முருகன், கார்த்தியின் நெருங்கிய நண்பனான கிருஷ்ணாவிற்கு போன் செய்து 'ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு வந்து சேந்துரு.. உன் ஆருயிர் தோழர் அவரையும் வர சொல்லிரு. வீட்டுக்காரரை கூட்டிட்டு அனுவையும் வர சொல்லிடு" என்று தகவல் சொல்கிறார். இதை கேட்கும் கிருஷ்ணா, "இந்த திருவிழாவில் பூஜை சாமிக்கு இருக்கோ, இல்லையோ உனக்கு இருக்குடா"என்று கார்த்திக்கை மனதில் நினைத்து கொண்டு திட்டுகிறான்.

தொடர்ந்து இதே செய்தியை போன் போட்டு சுந்தரிக்கு சொல்லும் கார்த்திக்கின் அக்கா 'முதல் காப்பு உனக்கு தான் சீக்கிரம் வந்து சேரு என கூறுகிறாள்'. அப்போது அங்கே இருக்கும் பாட்டி மற்றும் சித்தார்த்திடம் விவரத்தை கூறி விட்டு, சித்தார்த்தை பார்த்து நீயும் வா என்று கூறுகிறாள் சுந்தரி. உடனே சித்தார்த் 'உன் வீட்டுக்காரர் வருவாருல்ல.. கண்டிப்பா நா வரேன் என்கிறான். அனுவின் கணவன் கார்த்திக் தான் சுந்தரியின் கணவனும் கூட என்பது தெரியாமல்.. இதனை தொடர்ந்து சுந்தரி சித்தார்த்தை பார்ப்பதுடன் முடிகிறது லேட்டஸ்ட் ப்ரமோ.

Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Sun TV