ஷூட்டிங் ஸ்பாட்டில் ‘சுந்தரி’ செய்யும் அட்டகாசத்த பாருங்க!
ஷூட்டிங் ஸ்பாட்டில் ‘சுந்தரி’ செய்யும் அட்டகாசத்த பாருங்க!
சுந்தரி சீரியல்
Sun Tv Sundari Serial : சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியெல்லா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் போது அடிக்கடி ரீல்ஸ் செய்து இன்ஸ்டாவில் பதிவிடுவார். அவர் பதிவிட்ட வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.
என்னதான் விதவிதமாக திரைப்படங்கள் எடுத்தாலும் சீரியல்களுக்கென இருக்கும் ரசிகர்கள் கூட்டம் தனி தான். அதும் சன் டிவி சீரியலுக்கு சொல்லவே தேவையில்லை. தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல், ரோஜா, சுந்தரி சீரியல்கள் தான் டெலிவிஷன் பிரியர்களுக்கு டைம் பாஸாக உள்ளது. அதிலும் குறிப்பாக சுந்தரி சீரியல் தற்போது டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதில் சுந்தரியாக கேப்ரியெல்லா நடித்து வருகிறார். கிராமத்து பெண்ணாக இருந்த சுந்தரி, தற்போது சி.இ.ஓ சுந்திரியாக மாறியிருப்பது மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
சுந்தரியையும், அனுவையும் ஏமாற்றி வரும் கார்த்திக் எப்போது அனுவிடம் சிக்குவார் என்பதை நோக்கி சீரியல் விறுவிறுப்பாக நகர்ந்துக்கொண்டிக்கிறது. சுந்தரி சீரியலில் சுந்தரியாக நடிக்கும் கேப்ரியெல்லா இன்ஸ்டாகிராமில் செம்ம ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி ரீல்ஸ் பதிவிடுவது, கடிதாசிகாரி என்ற தலைப்பில் வீடியோ பதிவிடுவது என ஏதாவது செய்துக்கொண்டே இருப்பார். இதுமட்டுமில்லாமல் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களையும் பகிர்வார்.
இந்நிலையில் கேப்ரியெல்லா சுந்தரி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு நடனமாடி ஃபன் செய்து வருகிறார்.
மற்றொரு ரீல்ஸ் வீடியோவில் ஃபேமஸ் வடிவேலு டயலாக்கில் ரீல்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோவில் கார்த்திக்கின் நண்பராக நடிக்கும் ஆரவிஷ் உடன் ரீல்ஸ் செய்துள்ளார்.
ஷூட்டிங் ஸ்பாட்டில் ஃப்ரீயாக இருக்கும் போது ஃபன் ரீல்ஸ் வீடியோக்களை சீரியல் பிரபலங்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோக்களை ஜாலியாக செய்தாலும் ஒருவகையில் சீரியலுக்கும் ப்ரோமோஷனாக இருக்கிறது என்பதும் தவிர்க்கமுடியாத உண்மை.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.