Home /News /entertainment /

ஏ.ஆர் ரஹ்மான் ஆல்பத்தில் பாடி, நடித்துள்ள சன் டிவி சீரியல் நடிகை!

ஏ.ஆர் ரஹ்மான் ஆல்பத்தில் பாடி, நடித்துள்ள சன் டிவி சீரியல் நடிகை!

ஏ.ஆர்.ரஹ்மானுடன் கேப்ரியல்லா

ஏ.ஆர்.ரஹ்மானுடன் கேப்ரியல்லா

இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் மூப்பில்லா தமிழே தாயே ஆல்பத்தில் பணியாற்றும் வாய்ப்பு கேப்ரியல்லாவிற்கு கிடைத்தது.

    கேப்ரியல்லா செல்லஸ், ஒரு டிக்டாக்கராக தனது கலை வாழ்க்கையைத் தொடங்கினார். மிகவும் வைரலான டிக்டாக் வீடியோக்கள் வழியாக புகழ் பெற்ற பிறகு விஜய் டிவியின் பிரபல காமெடி ஷோவான 'கலக்க போவது யாரு' நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்றார் கேப்ரியல்லா செல்லஸ்.

    அதன்பிறகு 'ஐரா' என்கிற திகில் திரைப்படத்தின் வழியாக சினிமாவில் நடிக்கும் வாய்ப்பையயும் பெற்றார். ஐரா திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நயன்தாரா கேரக்டரின் இளமை கால வேடத்தில் நடித்தார் கேப்ரியல்லா செல்லஸ்.

    தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சுந்தரி’ சீரியலின் கதாநாயகியாக கேப்ரியல்லா நடித்து வருகிறார். டிஆர்பி ரேட்டிங் படி, நல்லபடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிக்கும் சீரியல்களில் ஒன்றாகவும் 'சுந்தரி' உள்ளது. இதற்கிடையில் ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் இண்டிபென்டென்ட் ஆல்பம் ஒன்றில் பணியாற்றும் வாய்ப்பு கேப்ரியல்லாவிற்கு கிடைத்தது. ரஹ்மானின் இந்த ஆல்பத்திற்கு "மூப்பில்லா தமிழே தாயே" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    உடனே "மூப்பில்லா தமிழே தாயே" ஆல்பத்தில் கேப்ரில்லா செல்லஸ் நடித்து உள்ளார் என்று நினைத்து விட வேண்டாம். மாறாக பாடல் பாடியுள்ளார். ஆம்! "மூப்பில்லா தமிழே தாயே" ஆல்பத்தில் ஏ.ஆர். ரஹ்மானுடன் சேர்த்து மொத்தம் 11 பேர் படி உள்ளனர். அதில் கேப்ரில்லாவும் ஒருவர்.

    இதுகுறித்து முன்னதாக கேப்ரியல்லா செல்லஸ், ஆஸ்கார் நாயகனுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து "நான் கனவில் கூட நினைத்து பார்க்காத நிஜம் நடந்தது" என்று மகிழ்ச்சியில் மூழ்கி திளைத்தார். "இது எனக்கு கிடைத்த ஒரு சிறந்த வாய்ப்பு.. இறைவனுக்கு நன்றி!" என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

    விஜய்யை விட நான் பெரிய நடிகன் இல்லை - வியக்க வைத்த கே.ஜி.எஃப் 2 யாஷ்!



    அதே புகைப்படத்தை ஏ. ஆர் ரஹ்மானும் தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு இளம் திறமைசாலியான கேப்ரில்லாவை கவுரவித்ததோடு நில்லாமல் கேப்ரில்லாவை ஃபாலோவும் செய்ய தொடங்கினார். ஏ.ஆர், ரஹ்மானை இன்ஸ்டாகிராமில் மொத்தம் 6.2 மில்லியன் பேர் ஃ பாலோ செய்கிறார்கள். அனால் அவர் வெறும் 100 பேரை மட்டுமே ஃபாலோ செய்கிறார் , அதில் கேப்ரில்லா செல்லஸும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது .

    Thalapathy Vijay: நீண்ட இடைவெளிக்குப் பிறகு டிவி-யில் தோன்றும் விஜய்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

    இதற்கிடையில் ஏ.ஆர் ரஹ்மானின் "மூப்பில்லா தமிழே தாயே" ஆல்பம் கடந்த மார்ச் 25 ஆம் தேதி வெளியானது. இது குறித்தும் கேப்ரில்லா தன் இன்ஸ்டா பேஜில் ஒரு போஸ்ட் ஷேர் செய்துள்ளார். அதில் "மூப்பில்லா தமிழே தாயே" பாடல் வெளியானது... இதில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி.. கிடைத்த வரமாக கருதுகிறேன்... ஏ.ஆர் ரஹ்மான் சாருக்கு மிகவும் நன்றி... கனவு மாறி இருக்கு!" என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆல்பத்தில் மற்றொரு வளரும் திறமைசாலியான பூவையாரும் ரஹ்மானுடன் இணைந்து பாடி, நடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




    பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ள "மூப்பில்லா தமிழே தாயே" ஆல்பம் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் உடன் கேப்ரியல்லா செல்லஸ், பூவையார் தவிர்த்து , சைந்தவி பிரகாஷ், கதீஜா ரஹ்மான், ஏ.ஆர்.அமீன், அமினா ரபிக், ரக்ஷிதா சுரேஷ், நிரஞ்சனா ரமணன், அபர்ணா ஹரிகுமார், நகுல் அப்யங்கர் ஆகியோரும் பாடி உள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: AR Rahman, Sun TV

    அடுத்த செய்தி