முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சாதனைப் படைத்த சுந்தரி சீரியல் - குவியும் வாழ்த்துகள்!

சாதனைப் படைத்த சுந்தரி சீரியல் - குவியும் வாழ்த்துகள்!

சுந்தரி சீரியல்

சுந்தரி சீரியல்

சுந்தரி சீரியல் பிப்ரவரி 2021 முதல் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல், புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

சுந்தரி சீரியல் தற்போது 600 எபிசோட்களைக் கடந்துள்ளது. இதனை போஸ்டர் மூலம் இன்ஸ்டகிராமில் உறுதிப்படுத்தியுள்ளது சன் டிவி. இதையடுத்து சுந்தரி குழுவினருக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

சீரியலின் புதிய மைல்கல்லைப் பற்றிப் பேசிய இயக்குநர் அழகர், "சுந்தரி சீரியல் முக்கிய மைல்கல்லை எட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த பயணம் எனது வாழ்க்கைக்கு உயிர் கொடுத்தது, குழுவினருக்கு நன்றி" என்றார். சுந்தரியாக நடித்து வரும் கேப்ரியல்லா செல்லஸ், "சுந்தரி போன்ற அற்புதமான சீரியலில் நடிப்பதில் பெருமைப்படுகிறேன். சீரியல் 600-வது எபிசோடை எட்டியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

ஒரே டான்ஸ் ஆடி ஊரில் வீடு.. அமுதவாணனுக்கு தங்க மோதிரம் பரிசளித்த ராமராஜன்.!
 
View this post on Instagram

 

A post shared by SunTV (@suntv)சுந்தரி சீரியல் பிப்ரவரி 2021 முதல் சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கேப்ரியல்லா செல்லஸ் மற்றும் ஜிஷ்ணு மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீகோபிகா நீலநாத் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜெய் ஸ்ரீனிவாஸ், மனோகர் கிருஷ்ணா மற்றும் பலர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sun TV, TV Serial