Home /News /entertainment /

’’நிஜத்தில் நான் இப்படித்தான்’’- மனம் திறந்த சுந்தரி

’’நிஜத்தில் நான் இப்படித்தான்’’- மனம் திறந்த சுந்தரி

சுந்தரி சீரியல்

சுந்தரி சீரியல்

Sundari Serial Gabrella Cellus : வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என்று பிரித்து பார்க்கவில்லை. என்னுடைய நோக்கம் மக்களிடம் சென்று சேர்வது தான்.

சின்னத்திரையில் முன்னணியில் இருக்கும் முக்கிய சேனல் சன் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் சுந்தரி. நிறத்திற்கும் - திறமைக்கும் - பின்னணிக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்து வரும் நடிகை கேப்ரில்லா செல்லஸ், இதில் ஹீரோயின் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இயல்பான மற்றும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி சின்னத்திரை ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருபவர் இவர்.

சமீபத்தில் நடந்த சன் குடும்ப விருதுகள் 2022 விழாவில், இவருக்கு ஃபேவரைட் ஹீரோயின் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இவர் முன்னணி இணையதளத்திற்கு சமீபத்தில் அளித்த பேட்டி பற்றி பார்க்கலாம். "எனக்கு அளிக்கப்பட்ட ஃபேவரைட் ஹீரோயின் அவார்ட் என்பது முழுக்க முழுக்க மக்களால் தேர்வு செய்யப்பட்டது என்பது எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம். அதே போல விழா மேடையில் என் அம்மா மற்றும் அம்மாச்சிக்கு நன்றி சொல்லினாலும் பதற்றத்தில் கணவரின் (ஆகாஷ்) பெயரை சொல்ல மறந்து விட்டேன். எனக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் தான் ஆகிறது. ஆனால் அதற்கு முன்பே எனது அம்மா என்னுடைய பயணத்தில் முழுக்க முழுக்க ஆதரவாக இருந்தார்.அது என் கணவருக்கும் நன்றாக தெரியும் என்பதால் நான் உன்னுடன் எந்த ஆடிஷனுக்கும் வரவில்லை என்பதால் நீ அம்மாவை பற்றி சரியாக தான் சொன்னாய். அதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை என்று கூறி விட்டார்" என்றார். மேலும் பேசிய கேப்ரில்லா, "சன்குடும்பம் 2022-ல் சுந்தரிக்கு மட்டுமே மொத்தம் 13 அவார்ட்ஸ் கிடைத்துள்ளது. இதற்கு முழு காரணம் சுந்தரி மட்டுமில்லை, ஒட்டு மொத்த டீமும் தான். எண்கள் டீம் மிகவும் பாசிட்டிவான டீம்.

also read : விஜே சித்ரா மரணத்தில் அரசியல்வாதிக்கு தொடர்புள்ளது - பரபரப்பை கிளப்பும் ஹேம்நாத்

பொது இடங்களுக்கு செல்லும் போது சிலர் என்னிடம் வந்தது சுந்தரி கதை, தங்கள் வாழ்வுடன் ஒத்து போவதாக கூறி கண்கலங்கி அழுவார்கள். சில பெண்கள் கட்டி பிடித்து உரிமையுடன் பேசுவார்கள். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. என் நடிப்பை பார்த்து எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்துட்ட பாப்பா என்று என அம்மா பாராட்டுவார். என் அம்மா எங்கு சென்றாலும் சுந்தரி அம்மா என்று தான் கூப்பிட்டு பேசுகிறார்கள். மொத்தத்தில் அவருக்கு பெருமை சேர்த்து விட்டேன்.வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை என்று பிரித்து பார்க்கவில்லை. என்னுடைய நோக்கம் மக்களிடம் சென்று சேர்வது தான். அது நாடகம் மூலம் நிறைவேறி இருக்கிறது. சுந்தரிக்கும் - கேப்ரியெல்லாவிற்கும் உள்ள வித்தியாசம் உடை ரீதியாகவும் இருக்கிறது. நான் ரியலில் எல்லா ஆடைகளையும் அணிவேன். பேசும்போது பெரும்பாலும் அழ மாட்டேன். கேப்ரியெல்லாவுக்கு பொறுமை இருக்கு, ஆனால் சுந்தரி அளவிற்கு இல்லை. எனவே பொறுமையை வளர்த்து கொள்ள விரும்புகிறேன். குறிக்கோளை நோக்கி போகும் விஷயத்தில் சுந்தரி மற்றும் கேப்ரியெல்லா இருவரும் ஒன்று தான். தொழில் வாழ்க்கையில் எந்த தடை வந்தாலும் கல் மனதோடு முன்னேறி போய் கொண்டே இருப்பேன்" என்றார்.

also read : நடிகர் விஜய்க்கு பிடித்த டிவி நிகழ்ச்சி இதுதானாம்...இந்த துறைக்குள் கஷ்டப்பட்டு வந்த போது எப்படி நிதி நிலைமைகளை சமாளித்தீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த கேப்ரி, அம்மா தான் தன்னை பார்த்து கொண்டதாக கூறினார். திடீரென எதாவது கிளாஸ் சேர வேண்டியிருக்கும். அது மாதிரியான நேரங்களில் செயினை அடகு வைத்து அம்மா காசு அனுப்பி வைப்பார் என்றார். கிட்டத்தட்ட 9 வருடங்களுக்கு மேல் அம்மா அனுப்பிய காசில் தான் என் தினசரி வாழ்க்கை ஓடியது. சீரியல் டைரக்டர் அழகர் பற்றி பேசுகையில், நடிகர்களை செதுக்கும் தேர்ந்த சிற்பி என்றார் கேப்ரியெல்லா. நல்ல சுதந்திரம் கொடுத்து நடிக்க வைப்பார். ஈகோ இல்லாத எல்லோரையும் சமமாக பார்க்க கூடியவர் அழகர் சார். இறுதியாக "கலை மக்களுக்கே" என்று தன் ரசிகர்களுக்கு கூறினார் கேப்ரில்லா செல்லஸ்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Sun TV, TV Serial

அடுத்த செய்தி