Home /News /entertainment /

சன் டிவி வானத்தைப் போல சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்

சன் டிவி வானத்தைப் போல சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்

வானத்தைப் போல சீரியல்

வானத்தைப் போல சீரியல்

சீரியலின் முக்கிய கதாபாத்திரமான சின்னராசு என்ற லீடிங் கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்ரீகுமார் நடித்து வருகிறார்.

    சன் டிவி வானத்தைப் போல சீரியலில் இருந்து இன்னொரு பிரபலமும் விலகியுள்ளார்.

    மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சன் டிவி-யின் தொடர்களில் ஒன்று வானத்தைப் போல. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் தேதி முதல் இந்த சீரியல் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அண்ணன்-தங்கை பாசத்தை எடுத்துரைக்கும் விதத்தில் இதன் கதைக்களம் அமைந்துள்ளதால் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளது.

    இதில் துளசி என்ற கதாபாத்திரத்தில் ஸ்வேதா என்பவரும், சின்ராசு வேடத்தில் தமன் என்பவரும் நடித்து வந்தார்கள். அவர்களின் கதாபாத்திரங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றன. ஆனால் பாதியிலேயே அவர்கள் வானத்தைப் போல சீரியலில் இருந்து விலகினர்.

    தனுஷ் எனக்கு மருமகன் இல்லை - அதிர்ச்சியைக் கிளப்பிய ரஜினிகாந்த்

    இதில் வெற்றி காதாபாத்திரத்தில் அஸ்வந்த் திலக்கும், துளசியாக மான்யா ஆனந்த், சந்தியாவாக தேப்ஜனி மோடக், கார்த்தியாக ராஜபாண்டி துரைசாமி, விஷ்வாவாக தரிஷ் ஜெயசீலன், சங்கர பாண்டியாக மகாநதி சங்கர் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். சீரியலின் முக்கிய கதாபாத்திரமான சின்னராசு என்ற லீடிங் கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்ரீகுமார் நடித்து வருகிறார்.

    இனப்பெருக்கம் செய்ய விரும்பிய ரசிகருக்கு சமந்தா கொடுத்த நச் பதில்!



     




    View this post on Instagram





     

    A post shared by SUNTELEVISIONS (@suntv_fanzclub)






    இந்நிலையில் வானத்தைப் போல சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷங்கரேஷ் குமார் தற்போது அதிலிருந்து விலகியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: Sun TV, TV Serial

    அடுத்த செய்தி