சின்னத்திரையில் தினசரி அதிகம் பார்க்கப்படும் சீரியல்களில் செவ்வந்தியும் ஒன்று. டிஆர்பி-யில் தொடர்ந்து நல்ல ரேட்டிங்கை பெற்று வரும் இந்தத் தொடர் தற்போது 200 எபிசோட்களை நிறைவு செய்துள்ளது. தமிழில் உள்ள தொலைக்காட்சியில் தினசரி அதிகம் பார்க்கப்படும் முதல் ஐந்து சீரியல்களில் செவ்வந்தி எப்போதுமே தனியிடம் உண்டு.
200 எபிசோட்களைக் கடந்த விஷயத்தை, சன் டிவி ஒரு ஸ்பெஷல் போஸ்டர் மூலம் உறுதி செய்துள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களில் ரசிகர்களிடம் இருந்து செவ்வந்தி டீமுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. செவ்வந்தியின் புதிய மைல்கல்லைப் பற்றிப் பேசிய இயக்குநர் ஓ.என்.ரத்தினம், "செவ்வந்தி ஒரு புதிய மைல்கல்லை எட்டியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த சீரியல் பயணம் எனது வாழ்க்கைக்கு உயிர் கொடுத்தது" என்றார்.
இந்த மைல்கல் குறித்து நடிகை திவ்யா ஸ்ரீதர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். "இயக்குனர் ஓ.என்.ரத்னம் சார் உடன் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி, செவ்வந்தியில் நடிப்பதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன்" என்றார். இதைப் பற்றி பேசிய நடிகர் நிதின் கிரிஷ் ஐயர், "செவ்வந்தி போன்ற அற்புதமான சீரியலின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன், மேலும் 200-வது எபிசோடை எட்டியதில் மகிழ்ச்சி" என்றார்.
View this post on Instagram
செவ்வந்தி ஜூலை 2022 முதல் ஒளிரபப்பாகி வருகிறது. இந்த சீரியலில் திவ்யா ஸ்ரீதர், ராகவ் மற்றும் நிதின் கிரிஷ் ஐயர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வினோத், பிரியங்கா, எஸ்.கே.சிவன்யா அழகு, ஜெயந்தி நாராயணன், பிரேமி, ஆண்ட்ரூ ஜேசுதாஸ், ஸ்ரீ வித்யா ஷங்கர், விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.