• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சன் டிவி சீரியலில் இணைந்த பிரபலம்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

சன் டிவி சீரியலில் இணைந்த பிரபலம்.. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

சன் டிவி சீரியல்

சன் டிவி சீரியல்

சன் டிவியில் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும், சீரியலை மறக்காமல் பார்த்து ஆதரவு கொடுங்க மக்களே என்றும் விதுன் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • Share this:
    நட்சத்திர பட்டாளத்துடன் களமிறங்கியுள்ள அருவி சீரியலில் ஹீரோவுக்கு நண்பன் கதாப்பாத்திரத்தில் விதுன் சவுத்திரி நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    தமிழக தொலைக்காட்சி வரலாற்றில் மக்களை சின்னத்திரைக்கு அடிமையாக்கியதில் சன் டிவிக்கு எப்போதுமே முதல் இடம். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தலைப்புகளில், விறுவிறுப்பான கதைக்களத்துடன் புதிய சீரியல்களை களமிறக்கி வரும் சன் டிவி, இன்றும் டி.ஆர்.பி ரேஸில் டாப் இடத்திலேயே இருக்கிறது.

    அந்த காலகட்டத்துக்கு ஏற்ற கதைக்களத்துடன் புத்தம் புது சீரியல்களை களமிறக்குவதில் சன் டிவி எப்போதுமே கிங் என்று கூட சொல்லலாம். அண்மையில் தாலாட்டு என்ற புத்தம் புது சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில் சின்னத்திரையில் முக்கிய பிரபலங்களாக இருக்கும் கிருஷ்ணா,ஸ்ருதிராஜ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த தொடரை Shak ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. அதே தயாரிப்பு நிறுவனம் சன் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள மற்றொரு புதிய சீரியலையும் தயாரிக்கிறது.

    ’அருவி’ என்ற அந்த சீரியல் அக்டோபர் 18ம் தேதி முதல் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. லீட் ரோலில், பூவே பூச்சூடவா தொடரில் நடித்த கார்த்திக் வாசு நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஜோவிதா லிவிங்ஸ்டன் ஹீரோயினாக நடிக்கிறார். அவர்களுடன் முக்கிய கதாப்பாத்திரத்தில் வெள்ளிதிரையில் கோலோச்சிய அம்பிகா, சின்னத்திரையில் பிரபலமான ஈஸ்வர் ரகுநாதன், லாவண்யா, கிருத்திகா லட்டு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.



     




    View this post on Instagram





     

    A post shared by Vidhun (@vidhun_offl)






    ஏற்கனவே நட்சத்திர பட்டாளங்கள் நிறைந்துள்ள இந்த சீரியலில் விதுன் என்கிற விதுஷ் சவுத்திரியும் இணைந்துள்ளார். அருவியில் ஹீரோவாக நடிக்கும் கார்த்திக் வாசுவுக்கு நண்பனாக விக்கி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். கதையின்படி, எந்த சூழ்நிலையிலும் நண்பனுக்கு தோள் கொடுப்பவனாக விக்கி இருப்பான். சதையும் தோலும்போல், அவர்கள் இருவரும் இருப்பார்கள்.

    எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் விக்கி, தன்னுடைய நண்பனுக்கு ஆதரவாக மட்டுமே இருப்பான். அருவி சீரியலில் இணைந்திருப்பது குறித்து விதுன் தன்னுடைய மகிழ்ச்சியை சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ரசிகர்கள் அனைவருடனும் ஒரு சந்தோஷமான செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் அருவியில் நானும் இணைந்துள்ளேன்.

    அன்றே கணித்தார் பிரியங்கா.. வெளி வரும் தாமரையின் உண்மை முகம்!

    அந்த சீரியலில் ஹீரோவான கார்த்திக் வாசுவின் நெருங்கிய நண்பன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன். புதிய குழுவில் இணைந்திருப்பது மகிழ்ச்சி. ரசிகர்களும் எப்போதும்போல் ஆதரவு கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். உங்களுடைய வாழ்த்துகளுக்கு என்னுடைய நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துளார். இந்த சீரியல் சன் டிவியில் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகும், மறக்காமல் சீரியலை பார்த்து ஆதரவு கொடுங்க மக்களே என்றும் விதுன் கேட்டுக் கொண்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: