Home /News /entertainment /

ரிவென்ஜ் மோட் ஆன் – கார்த்திக்கை வெளுத்து வாங்கும் சுந்தரி

ரிவென்ஜ் மோட் ஆன் – கார்த்திக்கை வெளுத்து வாங்கும் சுந்தரி

Sundari serial

Sundari serial

Sundari Serial | கடந்த சில எபிசோடுகளில் சுந்தரிக்கு நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பு வழங்கப்பட்டதை அடுத்து, இந்த வாரம் பட்டையை கிளப்பும் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்கிறது.

    சன் டிவியின் மிக முக்கியமான மற்றும் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணியில் வகித்து வரும் சீரியல்களில் ஒன்று தான் சுந்தரி. நிறத்திற்கும் - திறமைக்கும் - பின்னணிக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்து வரும் நடிகை கேப்ரில்லா செல்லஸ், சுந்தரி சீரியலின் ஹீரோயின் ரோலில் நடித்து வருகிறார்.

    வழக்கம் போல மற்றொரு அருக்காணியின் கதையாக தொடங்கிய இந்த சீரியல் ஜெட் வேகம் பிடித்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒன்றுமே தெரியாத கிராமத்து அப்பாவி பெண்ணை தன்னுடைய பெற்றோர் கூறியதற்காக திருமணம் செய்து கொள்கிறார் ஹீரோ. அதற்கு பின்னர் அவர் வேறு நகரத்தில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

    இதுதான் சீரியலின் தொடக்க காலத்தில் இருந்த கதைக்களம். அப்பாவி பெண்ணிற்கு தன் கணவரை பற்றி எப்பொழுது உண்மை தெரியவரும் என்று பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் இதே போன்ற காட்சிகள் இருந்தாலும், சுந்தரி சீரியலில் காட்சியமைப்புகள் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் காட்டப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி சுந்தரி சீரியலில் நாயக நாயகிகள் சிறப்பான தேர்வாக அமைந்துள்ளனர். குறிப்பாக நாயகி கேபிரில்லா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

    கடந்த சில எபிசோடுகளில் சுந்தரிக்கு நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பு வழங்கப்பட்டதை அடுத்து, இந்த வாரம் பட்டையை கிளப்பும் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்ப்பு எகிறிக் கொண்டிருக்கிறது.



    கதையின் நாயகனான கார்த்திக் வேலை பார்க்கும் அதே நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக சுந்தரிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் கார்த்திக்கின் செயலை கண்டிக்கும் காட்சிகள் இந்த வார புரோமோவில் உள்ளன.

    Also Read : எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் பாலாக்குள்ள இப்படி ஒரு கஷ்டமா!

    நிறுவனத்தின் ஊழியர்கள் இருவர் வேண்டும் என்றே கார்த்திக் மீது பழிபோட்டு சுந்தரியிடம் கூறுகின்றனர். அதற்கு சுந்தரி கார்த்திகை கண்டிக்கும் காட்சிகள் உள்ளன.

    கார்த்திக் ஊழியர்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்ததை பார்த்த சுந்தரிக்கு கோபம் வந்து விட்டது. தனியே கார்த்திகை கூப்பிட்டு கண்டிக்கும் பொழுது “படித்தவர் தான, நீங்க பட்டிக்காடு போல நடந்து கொள்கிறீர்கள்” என்று கடுமையாக பேசுகிறார். அதை கேட்டு கார்த்திக் அதிர்ந்து போகிறார்! இந்த வசனத்திற்கு சீரியலின் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பிளாஷ்பேக் உள்ளது.

    Also Read : அன்று பாலாவுடன் நடந்தது என்ன?... பிக் பாஸ் ரகசியத்தை உடைத்த அபிராமி!

    இதே வசனத்தை கார்த்திக் சுந்தரியிடம் கூறி திட்டியிருக்கிறார். இனி சுந்தரியின் டர்ன்! முழு ரிவன்ஜ் மோடில் ஈடுபடுவாரா அல்லது கார்த்திக் மீது சுந்தரிக்கு ஸாஃப்ட்கார்னர் இருக்கிறதா என்பது இந்த வார எபிசோடுகளில் தெரிய வரும்.



    அதுமட்டுமின்றி கார்த்திக் பொறுப்பேற்ற காலத்தில் இருந்த கணக்கு வழக்குகளை கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டுமென்று சுந்தரி கார்த்திக்குக்கு கட்டளையிடும் காட்சிகளும் உள்ளன. இதை கேட்டு கார்த்திக் அதிர்ந்து போகிறார். இனிமேல் அப்படித்தான் இருக்கும் என்று அதற்கும் சுந்தரி ஒரு பன்ச் வைத்தார்.

    கார்த்திக் சக ஊழியரிடம் கோபத்திலும், அவமானத்திலும் புழுங்கும் காட்சிகள் உள்ளன.
    Published by:Selvi M
    First published:

    Tags: Entertainment, Sun TV, TV Serial

    அடுத்த செய்தி