Home /News /entertainment /

தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடிக்கும் சீரியல் எது தெரியுமா?

தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடிக்கும் சீரியல் எது தெரியுமா?

Tamil Serial TRP

Tamil Serial TRP

Tamil Serial Update | புதிதாக ஒரு சீரியல் ஒளிபரப்புத் தொடங்கி, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து, டிஆர்பி ரேட்டிங்கில் குறிப்பிட்ட ரேங்க் பெறுவதற்கு சில வாரங்களாவது ஆகும். ஆனால், சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் ஒன்று, முதல் வாரத்திலேயே டிஆர்பியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

மேலும் படிக்கவும் ...
ஏகப்பட்ட சேனல்கள் ஏகப்பட்ட சீரியல்கள் என்று சீரியல்கள் வரிசை கட்டி போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. அதில் ஒரு சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடம் பிடிப்பது என்பது மிகவும் சவாலானதாகவே இருக்கிறது. சீரியலின் கதைக்களம், நடிகர், நடிகை என்று பல விஷயங்கள் இதில் உள்ளன. சீரியல் நடிகர் நடிகைகள் மாறுவதால் டிஆர்பி குறைந்துவிட்ட பல சீரியல்களும் இருக்கின்றன.

இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு புதிய சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக இடம்பெற்று, தொடர்ந்து முன்னிலையில் வகிப்பது ஒரு சாதனையாகும். புதிதாக ஒரு சீரியல் ஒளிபரப்புத் தொடங்கி, ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து, டிஆர்பி ரேட்டிங்கில் குறிப்பிட்ட ரேங்க் பெறுவதற்கு சில வாரங்களாவது ஆகும். ஆனால், சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் ஒன்று, முதல் வாரத்திலேயே டிஆர்பியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

சஞ்சீவ் ஹீரோவாக நடிக்கும் கயல் சீரியல்தான் சன் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக முதல் வாரத்திலேயே முதல் இடத்தைப் பிடித்துள்ளது. விஜய் டிவியில் ராஜா ராணி சீரியல் மூலம் தன்னுடைய சின்னத்திரை பயணத்தை தொடங்கினார் சஞ்சீவ். ராஜா ராணி தொடர் சூப்பர் ஹிட் சீரியலானது. அதைத் தொடர்ந்து, நடிகர் சஞ்சீவுக்கு மிகப் பெரிய அளவு ரசிகர் கூட்டம் உருவானது. குறிப்பாக, ஏகப்பட்ட ரசிகைகள் சஞ்சீவுக்கு உண்டு.

இந்தத் தொடரில் சஞ்சீவுக்கு ஜோடியாக ஜீ தமிழ் சேனலின் 'யாரடி நீ மோகினி' சீரியலில் நடித்த சைத்ரா ரெட்டி நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சஞ்சீவ் மற்றும் சைத்ரா ரெட்டி இருவருமே வேறு வேறு சேனல்களில் இருந்து சன்டிவியில் புதிய ஜோடியாக இணைந்துள்ளனர்.



கயல் சீரியலுக்கு போட்டியாக விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இடைப்பட்ட ஒரு சில வாரங்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்தது. பொங்கல் சமயத்தில் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்த பாக்கியலட்சுமி சீரியலை பின்னிக்குத் தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்தது கயல் சீரியல். சன்டிவியில் ஒளிபரப்பாகும் சன் டிவியின் சீரியலான சுந்தரி டிஆர்பி ரேட்டிங்கில் இரண்டாம் இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read : பிக் பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா?

கயல் சீரியல் தினமும் இரவு 7.30 மணிக்கு, ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வருகிறது. கயல் சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கி, முன்னணி இடத்தில் இருக்கும் அனைத்து சீரியல்களையும் பின்னுக்குத்தள்ளியது பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவும், அக்டோபர் 2021 முதல் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கிய முதல் வாரத்திலேயே சன் டிவியில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது. சுந்தரி சீரியலுக்கு அடுத்ததாக, வானத்தைப் போல சீரியல் தொடர்ந்து 6 வாரங்களாக மூன்றாவது இடத்தில் உள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Sun TV, TRP Rating, TV Serial

அடுத்த செய்தி