Home /News /entertainment /

உடல் முழுவதும் விஷம் பரவி ஆபத்தான நிலையில் அட்மிட்டான வெண்பா.. காப்பாற்றப்பட்டாரா?

உடல் முழுவதும் விஷம் பரவி ஆபத்தான நிலையில் அட்மிட்டான வெண்பா.. காப்பாற்றப்பட்டாரா?

Chithi 2

Chithi 2

Chithi 2 Serial | சில தவிர்க்க முடியாத காரணங்களால் நடிகை ராதிகா சீரியலில் இருந்து பாதிலேயே வெளியேறி விட்டாலும் கூட விறுவிறுப்பான கதை காரணமாக 'சித்தி 2' வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நிறைய சீரியல்களை, தமிழகத்தில் முன்னணி சேனலாக இருந்து கொண்டிருக்கும் சன் டிவி ஒளிபரப்பி வருகிறது.

தற்போது சன் டிவி-யில் காலை 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. பூவே உனக்காக, மகராசி, திருமகள், பாண்டவர் இல்லம், சந்திரலேகா, அருவி, தாலாட்டு, அபியும் நானும், சுந்தரி, கயல், வானத்தை போல, கண்ணான கண்ணே, ரோஜா, எதிர்நீச்சல், அன்பே வா உள்ளிட்ட சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது சன் டிவி. இவற்றுக்கு இடையே அத்திப்பூக்கள், உதிரிபூக்கள், நந்தினி, மற்றும் மெட்டிஒலி உள்ளிட்ட பழைய சீரியல்களும் ஒளிபரப்பாகி வருகின்றன.

மதியம் 1 மணி முதல் 1.30 வரை தற்போது டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வரும் ஹிட் சீரியல்  'சித்தி 2'. சில தவிர்க்க முடியாத காரணங்களால் நடிகை ராதிகா சீரியலில் இருந்து பாதிலேயே வெளியேறி விட்டாலும் கூட விறுவிறுப்பான கதை காரணமாக 'சித்தி 2' வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. 'சித்தி 2' சீரியலில் வெண்பா என்ற கேரக்டரில் நடிகை ப்ரீத்தி ஷர்மா ஹீரோயினாகவும், கவின் என்ற கேரக்டரில் நடிகர் நந்தன் லோகநாதன் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர்.

இன்றைய எபிசோட் வழக்கம் போல 1 மணிக்கு ஒளிபரப்பானது. மனைவி வெண்பாவை தேடி காரில் செல்லும் கவின், சில ரவுடிகள் தன் மனைவியை சூழ்ந்திருப்பதை பார்த்து, அவர்களை அடித்து நொறுக்கி வெண்பாவை காப்பாற்ற முயலுகிறார். ஆனால் ஒரு ரவுடி கத்தியால் குத்தி விட கண்முன்னே மயங்கி சரியும் வெண்பாவை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி செல்கிறார் கவின். மூச்சு பேச்சின்றி இருக்கும் வெண்பாவிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கிறார்கள்.ICU வாசலில் உறவினர்களுடன் அழுது கொண்டிருக்கும் கவினிடம் வெண்பாவை வெறும் கத்தியால் குத்தவில்லை விஷம் தடவிய கத்தியால் குத்தி உள்ள தகவலை பெண் மருத்துவர் தெரிவிக்கிறார். இதனை கேட்டு கவின் மற்றும் அவரது உறவினர்கள் மிகவும் அதிர்ச்சி அடைகிறார்கள். விஷம் வெண்பாவின் ரத்தத்தில் பரவி உடலின் பாகங்களை செயலிழக்க செய்து கொண்டிருக்கிறது. எனவே உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும். ஆனால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று மருத்துவர் கூறுவதை கேட்டு கதறி அழுகிறார் கவின். பின்னர் சிறந்த ஹாஸ்பிடல் மற்றும் சிறந்த மருத்துவர்கள் இங்கே இருக்கிறார்கள், நிச்சயம் வெண்பாவை காப்பாற்றி விடுவார்கள் என்று ஆறுதல் கூறும் உறவினர்களின் பேச்சை அடுத்து ஆபரேஷன் செய்ய சம்மதம் என்ற ஃபார்மில் கையெழுத்து போட்டு கொடுக்கிறார் கவின்.

Also Read : பாவாடை தாவணியில் யாஷிகாவின் ஹாட் போட்டோஸ்..

யாழினியும், கவினின் அம்மா மல்லிகாவும் வெண்பாவின் கத்தி குத்து விஷயத்தை பற்றி பேசி கொண்டிருக்கும் போது அதை கேட்டு விடுகிறார் யாழினியின் அம்மா கௌரி. இதில் இவர்கள் இருவரின் சதித்திட்டம் இருப்பதை ஓரளவு யூகிக்கும் கௌரி மகள் யாழினியை ஓங்கி கன்னத்தில் அறைந்து விட்டு வெண்பாவை பார்க்க ஹாஸ்பிடலுக்கு செல்கிறார். இதனிடையே அரிய ரத்த வகையான AB- பிளட் குரூப் வெண்பாவின் சர்ஜரிக்கு தேவை என்று டாக்டர்கள் கேட்க கவின் ஆப்ரேஷனுக்கு தேவையான ரத்தத்தை ஏற்பாடு செய்து வைக்க முடியாமலா சர்ஜரி செய்கிறீர்கள் என்று சத்தம் போடுகிறார். ஆனால் வெண்பாவின் ரத்தம் முழுவதும் விஷம் கலந்து விட்டதால், ஏற்பாடு செய்திருந்த ரத்தம் போதவில்லை என்று டாக்டர் விளக்கமளிக்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சியடையும் கவின் செய்வதறியாது திகைத்து நிற்க எனக்கு AB- பிளட் குரூப் தான் என்று குரல் மற்றும் கேட்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்துள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Sun TV, TV Serial

அடுத்த செய்தி