Home /News /entertainment /

சின்னத்திரையை கலக்கும் டாப் 10 சீரியல் ஹீரோக்கள் .. லிஸ்டில் மிஸ்ஸான விஜய் டிவி சீரியல் நடிகர்!

சின்னத்திரையை கலக்கும் டாப் 10 சீரியல் ஹீரோக்கள் .. லிஸ்டில் மிஸ்ஸான விஜய் டிவி சீரியல் நடிகர்!

சீரியல் நடிகர்கள்

சீரியல் நடிகர்கள்

சீரியல் நடிகர்கள் அனைவரும் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கின்றனர்.

    ஒவ்வொரு வருடமும் வெள்ளித்திரையில் மனம் கவர்ந்த நடிகர் நடிகைகளின் பட்டியல் வெளிவருவது உண்டு. தற்போது அந்த வரிசையில் சின்னத்திரை நடிகர்களின் பட்டியலும் இடம்பிடித்துள்ளது. காரணம் சமீப காலமாக சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது தான்.

    முன்பெல்லாம் சீரியல்கள் என்றால் வீட்டில் உள்ள இல்லத்தரசிகள் மட்டும் பார்க்கும் நிகழ்ச்சியாக இருந்த நிலையில், சமீப காலமாக இளசுகளையும் கட்டிப்போடத் தொடங்கியுள்ளது. அதிலும் இந்த கொரானா பெருந்தொற்று தொடங்கிய காலத்திலிருந்து பொழுதுபோக்கிற்காக மக்கள் அனைவருமே தொலைக்காட்சி பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினர்.

    இதனால் சமீபகாலமாக ஒவ்வொரு சேனலும் டிஆர்பி-யை அதிகரிக்க போட்டிபோட்டுக் கொண்டு சீரியல் கதைக்களத்தை விறுவிறுப்பாக அமைத்து வருகின்றனர். அந்த வகையில் சீரியல்களுக்கென ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வருகிறது. அதேபோல, ஒரு குறிப்பிட்ட சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சீரியல் நடிகர்கள் அனைவரும் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருப்பதால், ரசிகர்களின் ஆதரவு சோஷியல் மீடியாவில் அவர்களுக்கு பெருகியது. இந்நிலையில் அதிகம் ரசிகர்கள் வைத்திருக்கும் சீரியல் நடிகைகளில் முதல் 10 இடங்களை பிடித்த நடிகைகளின் பட்டியல் வெளியானது. இந்த நிலையில் சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்த டாப் 10 சீரியல் ஹீரோக்களின் பட்டியல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

    முதல் 10 இடத்தில் எந்தெந்த நடிகர்கள் உள்ளார்கள் என்ற விவரம் இதோ,

    1. விஷ்ணு:

    ஜீதமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பட்டு வரும் சீரியல் தான் சத்யா. முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது அதன் 2ம் பாகம் ஒளிபரப்பட்டு வருகிறது. இதில் ஹீரோவாக நடிக்கும் விஷ்ணுவிற்கு எண்ணற்ற ரசிகர்கள் இருக்கின்றனர்.

    2. சிபு சூர்யன்:

    1000-ம் எபிசோடுகளை கடந்து சன் டிவி-யில் வெற்றிகரமாக ஒளிபரப்பட்டு வரும் சீரியல் தான் ரோஜா. இதில், கதாநாயகனாக நடித்து வருபவர் தான் சிபு சூரியன். இந்த சீரியலுக்கு என மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

    3. விக்ரம் ஸ்ரீ:

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பான சிவா மனசுல சக்தி சீரியலில் கதாநாயகனாக நடித்தவர் தான் விக்ரம் ஸ்ரீ. தற்போது இவர் ஜீதமிழில் அன்பே சிவம் சீரியலில் நடித்து வருகிறார்.

    இதையும் படிங்க. சிம்பு படத்தில் பிக் பாஸ் சீசன் 5 பிரபலம்? தீயாய் பரவும் புகைப்படம்!

    4. அக்னி:

    ஜீதமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் இவர் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

    5. ஸ்ரீகுமார்:

    சன் டிவியில் தற்போது ஒளிபரப்பட்டு வரும் வானத்தைப் போல சீரியலில் சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் ஸ்ரீகுமார். முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் தமன்குமார் நடித்திருந்தார். ஸ்ரீகுமார் ஏற்கனவே பல சீரியல்களில் நடித்து மக்களிடையே பிரபலமானவர்.

    6. நந்தா:

    ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கோகுலத்தில் சீதை சீரியலில் நந்தா கதாநாயகனாக நடித்து வருகிறார்.

    7. செந்தில்:

    விஜய் டிவி-யில் வெற்றிகரமாக ஒளிபரப்பான சீரியல் தான் சரவணன்-மீனாட்சி. தற்போதும் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இந்த சீரியலின் கதாநாயகன் தான் இப்போதும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார்.

    இதையும் படிங்க.. பிக் பாஸ் அமீர் இப்படிப்பட்டவரா? வீடியோவால் தெரிய வந்த உண்மை! கண்ணீரில் ரசிகர்கள் கூட்டம்

    8. சித்து:

    விஜய் டிவி-யின் ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமண சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

    9. நந்தன்:

    சன் டிவியின் சித்தி2 சீரியலில் கதயநாகனாக நடித்து வருகிறார்.

    10. சஞ்சீவ்:

    சமீபத்தில் சன் டிவி-யில் தொடங்கப்பட்ட கயல் சீரியலில் சஞ்சீவ் நடித்து வருகிறார். முன்னதாக, இவர் விஜய் டிவியில் ராஜா ராணி, காற்றின் மொழி உள்ளிட்ட சீரியலில் நடித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Sun TV, TV Serial, Vijay tv, Zee tamil

    அடுத்த செய்தி