Home /News /entertainment /

உச்சபட்ச சொதப்பல்! - நெட்டிசன்களால் டிரால் செய்யப்படும் ரோஜா சீரியல்

உச்சபட்ச சொதப்பல்! - நெட்டிசன்களால் டிரால் செய்யப்படும் ரோஜா சீரியல்

ரோஜா சீரியல்

ரோஜா சீரியல்

Roja serial : இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை, அடுத்த காட்சியில் ரோஜா இறந்தது போல் அனுவை நம்ப வைக்க, ஏற்கெனவே இறந்த பெண்ணின் உடலை கொண்டு வருகின்றனர். அந்த பெண்ணின் முகத்தில் நடுரோட்டில் வைத்து முகமாற்று அறுவை சிகிச்சை செய்து...

Sun TV Roja Serial Episode: சன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ரோஜா சீரியலின் காட்சி ஒன்று நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. இதற்கு முன்னர் ரோஜா சிறையில் இருந்த காட்சிகள் இணையத்தில் அதிகமாக கலாய்க்கப்பட்டது.  தற்போது மீண்டும் அப்படியொரு காட்சியை வைத்து விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார் இயக்குநர்.

சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்று ரோஜா. இந்தத் தொடரில் சிபு சூர்யன், பிரியங்கா நல்கார், வெங்கட் ரங்கநாதன், ஷாமிலி சுகுமார், காயத்ரி சாஸ்திரி, வடிவுக்கரசி, சிவா, ராஜேஷ் போன்ற பல முன்னனி பிரபலங்கள் நடித்து வருகின்றனர். வெற்றிகரமாக ஆயிரம் எபிஸோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடரில் தற்போது விறுவிறுப்பை கூட்டியுள்ளார் இயக்குநர்.

டைகர் மாணிக்கம், செண்பகத்தின் உண்மையான வாரிசு யார் என்பது வெளிச்சத்துக்கு வரும் தருவாயில், அனு பல்வேறு சதி திட்டங்களை தீட்டுகிறார். மற்றொருபுறம், ரோஜா தான்தான் வாரிசு என்ற விஷயத்தை நிரூபித்து அம்மா அப்பாவுடன் மகிழ்ச்சியாக வாழ போராடுகிறார்.

அன்னபூரணிக்கு, அஸ்வினுக்கும் ரோஜாவுக்கும் திருமணம் நடந்த விஷயம் தெரியவந்தபோது  கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் ரோஜா பாட்டியின் மனதை புண்படுத்த நினைக்கவில்லை என்று கூறி வீட்டை விட்டு வெளியேற தயாரானார். அர்ஜுனும் ரோஜாவுடன் செல்ல முடிவெடுத்தபோது பாட்டியின் மனம் மாறுகிறது.

Roja serial today episode
ரோஜா சீரியல்


ரோஜாவுக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்கிறார் பாட்டி.  வழக்கம்போல் இந்த விஷயத்தில் அனு மூக்கை நுழைத்து, ஏன் இப்படி செய்றீங்க என்று அனு, பாட்டியிடம் கேட்க, பாட்டி பளார் என்று அனு கன்னத்தில் அறைகிறார்.

டிஎன்ஏ டெஸ்ட்  முடிவு வரவரைக்கும் தான் உனக்கு மரியாதை என்று எச்சரிக்கைவிடுக்கிறார்.

இதையும் படிங்க.. மீண்டும் குட்டி தேவதை! - நீலிமாவின் கர்ப்பகால பராமரிப்பு

முந்தைய எபிசோடில் டிஎன்ஏ டெஸ்டுக்கு ரோஜா தயாராகி அம்மாவுடன் காரில் செல்கிறார். ஆனால் அவர்களை செல்ல விடாமல் தடுக்க அனு துப்பாக்கியுடன் வழிமறிக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத ரோஜா அதிர்ச்சி அடைகிறார்.

ரோஜாவும், அனுவும் காரை விட்டு கீழே இறங்கி வந்து, நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.  ரோஜா மீது இருந்த கொலைவெறியில் அவரை துப்பாக்கியால் சுடுகிறார் அனு. ரோஜா கழுத்தில் குண்டு பாய்ந்து சரிகிறார். `அச்சச்சோ ரோஜாவை சுட்டுட்டாங்களே’ என்று நாம் உச்சு கொட்டும் சமயத்தில், ஒரு டிவிஸ்ட் வைக்கிறார் இயக்குநர். அதாவது அங்கு துப்பாக்கி குண்டு பாய்ந்து சரிந்தது ரோஜாவே கிடையாதாம். எல்லாம் அர்ஜுன் செட்டப்பாம்!

அனு துப்பாக்கியால் ரோஜாவை சுட போவதை  முன்பே கண்டுபிடித்த அர்ஜுன், துப்பாக்கியின் நிஜ தோட்டாவை மாற்றி வைக்கிறார். இதனால் ரோஜா உயிர் பிழைக்கிறார். ஆனால் அர்ஜுன் சொன்னபடி குண்டு பாய்ந்த மாதிரி அனு முன்பு நடிக்கிறார்.

Roja serial today episode
ரோஜா சீரியல்


இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை, அடுத்த காட்சியில் ரோஜா இறந்தது போல் அனுவை நம்ப வைக்க, ஏற்கெனவே இறந்த பெண்ணின் உடலை கொண்டு வருகின்றனர். அந்த பெண்ணின் முகத்தில் நடுரோட்டில் வைத்து முகமாற்று அறுவை சிகிச்சை செய்து ரோஜா முகம் போன்று மாற்றுகின்றனர். இதனை பார்த்து ரோஜாவே வாய் பிளக்கிறார். அர்ஜுன் சார் வக்கீல் என்றாலும், மருத்துவமும் தெரிந்து வைத்திருப்பது ஆச்சரியத்திற்குரிய விஷயம்.  அதுவும் நடுரோட்டில் வைத்து முகத்தை மாற்றி பிளாஸ்டிக் சர்ஜரி செய்தது விஞ்ஞானமே ஆச்சர்யப்படும் கண்டுபிடிப்பு!

இந்த காட்சியை கட் செய்து டிவிட்டரில் கடுமையாக விமர்சித்து, கலாய்த்து வருகின்றனர், குறிப்பாக இந்த காட்சியில் செண்பகமாக நடிக்கும் ஷர்மிலா நிஜத்தில் டாக்டர் என்பதால் அவரை டேக் செய்து, ``இந்த சீரியலில் இப்படி ஒரு காட்சி வைத்திருப்பது உங்களுக்கு சிரிப்பு வரவில்லையா டாக்டரே’’, என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
Published by:Aswini S
First published:

Tags: Sun TV, Troll, TV Serial, Twitter Troll

அடுத்த செய்தி