Home » News » Entertainment » TELEVISION SUN TV ROJA SERIAL RUMOURS ACTRESS PRIYANKA NALKARI CLARIFIES MSB

ரோஜா சீரியல் முடிவடையப் போகிறதா? - உண்மைநிலையை விளக்கிய நடிகை

ரோஜா சீரியல் முடிவடையப் போவதாக வெளியான தகவல் குறித்து நடிகை ப்ரியங்கா பதிலளித்துள்ளார்.

ரோஜா சீரியல் முடிவடையப் போகிறதா? - உண்மைநிலையை விளக்கிய நடிகை
ரோஜா சீரியல்
  • News18 Tamil
  • Last Updated: September 14, 2020, 8:48 PM IST
  • Share this:
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரோஜாவும் ஒன்று. இத்தொடரில் சிபு சூரியன் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ப்ரியங்கா நடிக்கிறார். இந்த ஜோடிக்கு ரசிகர்களும் ஏராளம்.

மேலும் நடிகை வடிவுக்கரசி, ஷாமிலி, சுகுமார், வெங்கட் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்ட இத்தொடரின் படப்பிடிப்பு ஜூலை மாதத்திலிருந்து தொடங்கியது. இதையடுத்து புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. திரைப்பட நடிகை யாஷிகா ஆனந்த் கெஸ்ட் ரோலில் என்ட்ரி கொடுத்து அசத்தினார்.

600 எபிசோட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் இத்தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் லைவ் வந்த ரோஜா சீரியல் ஹீரோயின் ப்ரியங்காவிடம் சீரியல் முடிவடையப் போகிறதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.






அதற்கு பதிலளித்த அவர், யார் சொன்னது. ரோஜா சீரியல் முடிவடையப் போகிறது என்பதெல்லாம் வதந்தி. அதை எல்லாம் கண்டுகொள்ள வேண்டாம். வரப்போகும் எபிசோட்கள் நிறைய திருப்பங்கள் இருக்கும். உங்களுக்கு மிகவும் பிடிக்கும்படி இருக்கும்” என்று கூறியுள்ளார்.



இதன் மூலம் இப்போதைக்கு ‘ரோஜா’ சீரியலுக்கு என்ட் கார்டு இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
First published: September 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading