Priyanka Nalkari: ’பேச்சு சத்தம் கேட்டு தானா விழும் ஓட்டு’ - ’ரோஜா’ சீரியல் பிரியங்கா!

Priyanka Nalkari: ’பேச்சு சத்தம் கேட்டு தானா விழும் ஓட்டு’ - ’ரோஜா’ சீரியல் பிரியங்கா!

பிரியங்கா நல்காரி

ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணை மையப்படுத்தி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது.

  • Share this:
    சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘ரோஜா’ சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. ஹீரோவாக சிபு சூரியன், ஹீரோயினாக பிரியங்கா நல்காரி நடித்து வரும் இந்த சீரியலில் அவர்களின் ரொமான்ஸ் காட்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் இருப்பதை மறுக்க முடியாது.

    ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணை மையப்படுத்தி இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு கட்டத்தில் தனது தந்தையை சந்திக்கிறாள் ரோஜா, ஆனால் அவர்கள் இருவருக்கும் ஒருவருக்கொருவர் அடையாளங்கள் தெரியாமல் போகிறது. அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்புடன் கதை நகர்கிறது.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Tellywood (@tamiltellywood)






    இந்த சீரியலில் நடித்து வரும் இன்னொரு நடிகை ஸ்மிரிதி காஷ்யாப். தற்போது பிரியங்கா நல்காரியும், ஸ்மிரிதியும் இணைந்து ‘’ஹே வாடா வாடா பையா’’ என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளனர். ஜீவா, பூனம் பாஜ்வா நடிப்பில் வெளியான ‘கச்சேரி ஆரம்பம்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் ரசிகர்களிடம் பிரபலமானது. அந்தப் பாடலுக்கு சீரியல் நடிகைகள் நடனமாடியிருப்பது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகி வருகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: