• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’மேக்கப் இல்லாமயே செம கியூட்டாக இருக்கீங்களே’ - ரோஜாவின் லேட்டஸ்ட் படம்!

’மேக்கப் இல்லாமயே செம கியூட்டாக இருக்கீங்களே’ - ரோஜாவின் லேட்டஸ்ட் படம்!

பிரியங்கா நல்காரி

பிரியங்கா நல்காரி

சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் பிரியங்கா நல்காரி.

  • Share this:
    ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் பிரியங்கா நல்காரி, தற்போது மேக்கப் இல்லாமல் இருக்கும் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

    சன் டிவியில் பீக் டைமில் ஒளிப்பரப்பாகும் சீரியல் ரோஜா. இதில் லீட் ரோலில் நடிப்பவர் நடிகை பிரியங்கா நல்காரி. ஆந்திரா பொண்ணான இவர், தெலுங்கு, கன்னட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். சிறுவயதிலே டான்ஸ் மீது கொண்ட ஆர்வத்தால் முறைப்படி நடனம் கற்றுக்கொண்டார். முதன் முதலில் தெலுங்கில் இயக்குநர் சந்திரா சித்தார்த்தா இயக்கத்தில் வெளியான ‘அந்தாரி பந்துவையா’ படத்தில் நடித்த பிரியங்கா தனது அறிமுக படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்.

    அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வர தெலுங்கு கன்னடத்தில் பிஸியானார். பின்பு ஈ டிவியில் ஒளிபரப்பான ‘மேகமாலா’ மற்றும் ஜெமினி டிவியில் ஒளிபரப்பான ‘ஸ்ரவனா சமீராலு’ ஆகிய இரண்டு சீரியல்களிலும் நடித்து சின்னத்திரையிலும் கால் பதித்தார். பிரியங்காவை ஆந்திர மக்கள் தங்கள் வீட்டு பெண் போல் வரவேற்றனர். அவரின் 2 சீரியல்களும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது

    தெலுங்கில் பிரபலமானவுடன் அவரின் பார்வை தமிழ் மீது திரும்பியது. சென்னையில் வாய்ப்பு தேடிய அவருக்கு முதன்முதலாக சுந்தர் சி வாய்ப்பு கொடுத்தார். அவருடைய படமான ’தீயா வேலை செய்யனும் குமாரு’ படத்தில் ஹன்சிகா ஃப்ரண்டாக நடித்தார். இதுவரை 12 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அவர், திரையுலகில் 18 வருட அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்.

    வெள்ளித்திரையில் இருந்து தமிழ் சின்னத்திரைக்கு வந்த பிரியங்கா, சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதில் ரோஜா அணியும் சேலைகளுக்காக, சீரியல் பார்க்கும் இல்லத்தரசிகள் ஏராளம். அதுமட்டுமில்லை இந்த சீரியலில் அர்ஜூன்-ரோஜா ரொமான்ஸ் காட்சிகளுக்கே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்த தொடர் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரியங்கா தனி இடத்தை பிடித்துவிட்டார்.

    இன்ஸ்டாகிராமில் அவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. கலக்கலான புகைப்படங்களை பதிவேற்றி வந்த பிரியங்கா, தற்போது துளிகூட மேக்கப் இல்லாத புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அவரது புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், மேக்கப் இல்லாமலே செம கியூட்டாக இருக்கிறீங்களே எப்படிங்க... என கேட்டுள்ளனர்.




    மற்றொருபுறம், சீரியலில் செம லுக்காக இருக்கும் நீங்களா இது? என கேள்வி எழுப்பியுள்ள நெட்டிசன்கள், அது எல்லாம் மேக்கப் மற்றும் லைட் செட்டிங்கா? என வினவியுள்ளனர். யாரு என்ன கூறினாலும், பிரியாங்காவின் ’அழகே அழகு தான்’ என அவரின் தீவிர ரசிகர்கள், யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என லைக்குகளை வாரி வழங்கி வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: