ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவி-யின் சூப்பர் ஹிட் சீரியல்?

விரைவில் முடிவுக்கு வரும் சன் டிவி-யின் சூப்பர் ஹிட் சீரியல்?

இந்த சீரியலில் அர்ஜூன், ரோஜா இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியலில் அர்ஜூன், ரோஜா இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சீரியலில் அர்ஜூன், ரோஜா இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியல் விரைவில் முடிவுக்கு வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

  தொலைக்காட்சி சீரியல்களில் சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இதில் குறிப்பாக ரோஜா சீரியல், மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளது. சன் டி.வி.யில் காலை முதல் இரவு வரை பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் இல்லத்தரசிகளின் நம்பர் ஒன் சாய்ஸ் ‘ரோஜா’ சீரியல் தான்.

  இந்த சீரியலில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிபு சூர்யன், ரோஜாவாக பிரியங்கா நல்கார், வில்லி அனு கதாபாத்திரத்தில் விஜே அக்ஷயா நடித்து வருகின்றனர். இவர்களுடன் மெட்டி ஒலி புகழ் காயத்ரி சாஸ்திரி அர்ஜுனின் அம்மா கதாபாத்திரத்திலும், வடிவுக்கரசி பாட்டி கதாபாத்திரத்திலும், அர்ஜுன் அப்பாவாக சிவா, வழக்கறிஞராக ராஜேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

  குறிப்பாக இந்த சீரியலில் அர்ஜூன், ரோஜா இடையிலான ரொமான்ஸ் காட்சிகள் இளைஞர்களை கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இல்லத்தரசிகளைப் போலவே ரோஜா சீரியலுக்கு இளைஞர்கள் மத்தியிலும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

  ஹாலிவுட் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாசன்!

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்நிலையில் தற்போதைய தகவலின் படி, ரோஜா சீரியல் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறதாம். கடந்த 2018, ஏப்ரல் மாதத்திலிருந்து ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர் முடிவடையும் செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  Published by:Shalini C
  First published:

  Tags: Sun TV, TV Serial