முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / 'ரசிகர்களே ஆதரவு கொடுங்கள்' - ரோஜா சீரியல் புது வில்லி வேண்டுகோள்!

'ரசிகர்களே ஆதரவு கொடுங்கள்' - ரோஜா சீரியல் புது வில்லி வேண்டுகோள்!

ரோஜா சீரியல்

ரோஜா சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் அந்த தொலைக்காட்சியின் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதன்மை இடத்தில் இருந்து வருகிறது.

சன்டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வி.ஜே. அக்ஷையா, ஆதரவு கொடுக்குமாறு ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியல் அந்த தொலைக்காட்சியின் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதன்மை இடத்தில் இருந்து வருகிறது. கதாநாயகனாக சிபு சூரியனும், நாயகியாக பிரியங்கா நல்காரியும் நடிக்கின்றனர். வெள்ளிதிரையில் அசாதாரணமாக நடித்து முத்திரை பதித்த வடிவுக்கரசியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த தொடரில் ஷாமிலி குமார் வில்லியாக நடித்து வந்தார். அவரின் சிறப்பான நடிப்பால் தொடரின் ஒவ்வொரு எபிசோடு மீதான எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டே சென்றது. 800 எபிசோடுகளையும் கடந்து கதைக்களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தொடரில் இருந்து விலகுவதாக ஷாமிலி குமார் அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தனக்கென யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் அவர், அதில் ரோஜா சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தையும் கொடுத்தார். தாய்மை அடைந்த காரணத்தால் சீரியலில் இருந்து விலகுவதாகவும், ஆனால் யூடியூப் சேனலில் மக்களுடன் தொடர்பில் இருப்பேன் எனத் தெரிவித்தார்.

ரோஜா சீரியலில் இருந்து ஷாமிலி விலகியது ரசிகர்களுக்கு பெரும் வியப்பையும், சோகத்தையும் உருவாக்கியது. ஏனென்றால் அந்தக் கதாப்பாத்திரத்துடன் அவர் ஒன்றிப்போய் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார். வில்லிக்கே உரிய அத்தனை அம்சங்களையும் கச்சிதமாக பொருந்தி செய்து வந்தார். இதற்கான சன் தொலைக்காட்சியின் விருது நிகழ்சியில் சிறந்த வில்லிக்கான விருதை பெற்று அசத்தினார்.
 
View this post on Instagram

 

A post shared by Akshayaa 👸 (@vjakshaya)ஷாமிலி குமார் விலகியதையடுத்து புதியதாக வில்லி கதாப்பாத்திரத்தில் நடிக்கப்போவது யார்? என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருந்தது. பல்வேறு பெயர்கள் அடிபட்ட நிலையில் சன் தொலைக்காட்சியில் வி.ஜே.வாக இருக்கும் அக்ஷையா நடிக்க இருப்பது உறுதியானது. அவர் நடிப்பு எப்படி இருக்குமோ? என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தான் அறிமுகமான எபிசோடிலேயே தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அக்ஷையா வெளியிட்டுள்ள பதிவில், தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக மாறியிருக்கும் தனக்கு எப்போதும்போல் ரசிகர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Also read... Vijay Television: விஜய் டிவி-யின் புத்தம் புதிய சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்கும் பிரபல நடிகர்!

ஏற்று நடிக்கும் கதாப்பாத்திரத்துக்கு தேவையான முழு நடிப்பையும், திறமையும் கொடுப்பேன் எனக் கூறியுள்ள அவர், கதாப்பாத்திரம் சிறந்து விளங்க உங்களின் ஆசியும் அன்பும் தேவை எனக் கேட்டுள்ளார். மேலும், ரோஜா சீரியலில் தான் நடிக்கும் கதாப்பாத்திரத்துக்கு ரசிகர்களிடையே கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்தடுத்த முடிவுகள் எடுக்க இருப்பதாகவும் அக்ஷையா தெரிவித்துள்ளார்.

அவரின் இந்தப் பதிவுக்கு ரசிகர்கள் அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஹிட் லிஸ்ட், வணக்கம் தமிழா போன்ற நிகழ்ச்சிகளை அவர் சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Entertainment