Sun TV Roja: அம்மாவாக போகும் ’ரோஜா’ சீரியல் வில்லி அனு! குவியும் வாழ்த்துகள்!

கணவருடன் ஷாமிலி

ரோஜா சீரியலில் வில்லியாக நடிக்கும் "தென்றல்" புகழ் ஷாமிலி சுகுமார், நடிகர் விஷ்ணு விஷாலுடன் "ஜீவா" படத்திலும் நடித்துள்ளார்.

  • Share this:
    சீரியல் நடிகை ஷாமிலி சுகுமார் அன்னையர் தினத்தில் ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளார்.

    சன் டிவியின் மிக வெற்றிகரமான தினசரி சீரியல்களில் ரோஜாவும் ஒன்று. ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றுள்ள இந்த சீரியல் சில நாட்களுக்கு முன்பு 800 எபிசோடைக் கடந்தது. இதில் சிபுசுரியன் மற்றும் பிரியங்கா நல்காரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

    ரோஜா சீரியலில் வில்லியாக நடிக்கும் "தென்றல்" புகழ் ஷாமிலி சுகுமார், நடிகர் விஷ்ணு விஷாலுடன் "ஜீவா" படத்திலும் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர், தற்போது கர்ப்பமாகியிருக்கிறார். இதனை தனது கணவருக்கு சர்ப்ரைஸாக தெரியப்படுத்தியுள்ளார்.



    தாங்கள் பெற்றோராகப் போகும் விஷயத்தை ஒரு பேப்பரில் எழுதி, அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு கணவரிடம் கொடுத்திருக்கிறார் ஷாமிலி. அதைப் பார்த்த அவரது கணவரின் ரியாக்‌ஷனை வீடியோவாக எடுத்து தனது யூ-ட்யூப் சேனலில் பதிவிட்டிருக்கிறார். இதைப் பார்த்த ஷாமிலியின் நண்பர்களும், ரசிகர்களும் கமெண்ட் செக்‌ஷனை வாழ்த்துகளால் நிரப்பி வருகின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published: