விஷ்ணு விஷாலின் மாஜி மனைவி ரஜினிக்கு பிடித்த சன் டிவி ரோஜா சீரியல்! ஏன் தெரியுமா?

சன் டிவி ரோஜா சீரியல்

ரஜினியின் நெருங்கிய நண்பர். அந்த நட்பின் அடையாளமாகவே தனது மகளுக்கு ரஜினி என பெயர் சூட்டியிருந்தார்.

 • Share this:
  சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ரோஜா சீரியலில் முக்கியமான ரோலில் நடிக்கும் மூத்த நடிகர் கே.நட்ராஜ், நடிகர் விஷ்ணு விஷாலின் முன்னாள் மனைவி ரஜினியின் அப்பா ஆவார்.

  சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்களில் ரோஜா சீரியல் பலரின் கவனத்தையும் ஈர்த்த சீரியல் ஆகும். இந்த தொடரில் மூத்த நடிகர்கள் பலரும் நடிக்கின்றனர். வடிக்கரசி இதில் அர்ஜூன் பாட்டியாக கலக்கி வருகிறார். டைகர் மாணிக்கம் மகள் ரோஜா சின்ன வயதில் தொலைந்து விட, அவள் சொந்த மாமா மகள் என தெரியாமல் கல்யாணம் செய்து கூடி வரும் அர்ஜூன். இந்த ஒன்லைன் ஸ்டோரில் தொடங்கிய இந்த சீரியல் இன்று பல எபிசோடுகளைத் தாண்டி டிஆர்பியிலும் நல்ல ரேட்டிங்கில் உள்ளது.

  இந்த சீரியலில், ரோஜா வளரும் ஆசிரமத்தின் பாதுகாவலராக நடிப்பவர் பழம்பெரும் மூத்த நடிகர் கே. நட்ராஜ். இவரை பல படங்களில் வில்லனாகவும், குணசித்ர வேடங்களிலும் பார்த்திருப்பீர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னத்திரை பயணத்தை தொடங்கியவர் முக்கியமான ரோல்களில் மட்டுமே நடித்து வருகிறார். விஜய் டிவியிலும் சில சீரியல்களில் இவர்களை பார்த்திருப்பீர்கள். இவரின் மகள் ரஜினி, நடிகர் விஷ்ணு விஷாலின் மாஜி மனைவி ஆவார். இவருக்கு ரஜினி என பெயர் வைத்த காரணம் பலருக்கும் தெரிந்திருக்கும். இவர் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பர். அந்த நட்பின் அடையாளமாகவே தனது மகளுக்கு ரஜினி என பெயர் சூட்டியிருந்தார்.

  மாஜி கனவர் விஷாலுடன் ரஜினி


  தன்னுடைய அப்பா நடிக்கும் சீரியலை ரஜினி மிஸ் செய்யாமல் பார்த்துவிடுவாராம். அவர் வரும் எபிசோடுகளை தவறாமல் பார்த்துவிட்டு அதுக்குறித்து நேரம் கிடைக்கும் போது தனது தந்தையுடன் பேசி மகிழ்வாராம். இவருக்கு விஷாலுக்கு விவகாரத்து ஆகி, விஷால் இப்போது பேட்மிட்டன் வீராங்கனையை திருமணம் செய்துக்கொண்டார். இருப்பினும் சமீபத்தில் அவர் AR அதாவது தனது மகன் ஆரியன் பெயரையும், மாஜி மனைவி ரஜினி பெயரையும் சேர்த்து AR என டாட்டு குத்தியிருந்தது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது.
  Published by:Sreeja Sreeja
  First published: