பிரபல சீரியல் நடிகை ஒருவர் ஆண் வேடத்தில் இருக்கும் படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
சன் டிவியில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டவர் இல்லம். இதில் நரேஷ், அப்சர், பாப்ரி கோஷ், ஆர்த்தி என பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். அண்ணன் - தம்பி மற்றும், கூட்டுக் குடும்ப பின்னணியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதில் கயல் என்ற கதாபாத்திரத்தில் பாப்ரி கோஷும், அவரது கணவராக நரேஷ் ஈஸ்வரும் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் பாப்ரி ஆண் தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் ஒரு காட்சிக்காக பாப்ரி ஆணாகவும், நரேஷ் பெண்ணாகவும் வேஷம் போட்டு நடித்துள்ளனர். அந்தப் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
முத்தத்துடன் காதலர் தினத்தைக் கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ் சிவன் - வீடியோ!
கொல்கத்தாவில் 1990-ல் பிறந்த பப்ரி கோஷ், 2009-ஆம் ஆண்டு வெளியான பெங்காலி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அவர் ஒரு நடிகையாக வேண்டும் என்பது பப்ரியின் அப்பாவின் ஆசையாம்.
Arabic Kuthu: யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடம், 20 மில்லியன் நிகழ்நேர பார்வைகள்... கலக்கும் விஜய்யின் அரபிக் குத்து!
பெங்காலி படத்தைத் தொடர்ந்து தெலுங்கு, அதன் பின்னர் தமிழிலும் அறிமுகமானார். 2015-ல் வெளியான ’டூரிங் டாக்கீஸ்’ திரைப்படம் தான் பப்ரியின் முதல் தமிழ் படம். இதனை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து, ’பைரவா’, ’சக்கப் போடு போடு ராஜா’, ’சர்கார்’, ’விஸ்வாசம்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷின் அக்காவாகவும் (விஜய்க்கு அண்ணி முறை), விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாகவும் நடித்திருப்பார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.