படு ஸ்லிம்மாக இருக்கும் சன் டிவி சீரியல் நடிகை 2012-ல் எப்படி இருந்தார் தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்!

பாண்டவர் இல்லம் சுந்தரி

சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்த மெட்டி ஒலி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

 • Share this:
  சின்னத்திரை நடிகை கிருத்திகா அண்மையில் வெளியிட்ட வீடியோ ஒன்று அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. படு ஸ்லிம்மாக இருக்கும் அவர் 2012-ம் ஆண்டு எப்படி இருந்தார் என்பதை கண்டு ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

  15-வயதிலிருந்தே சீரியலில் நடித்து வரும் நடிகை கிருத்திகா, இடையில் ஒரு பிரேக் எடுத்துக்கொண்டு தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ’பாண்டவர் இல்லம்’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் 10-ஆம் வகுப்பு படிக்கும்போது, ஆண்டான் அடிமை என்ற படத்தில் சத்யராஜ் தங்கையாக நடித்து திரையுலகில் அறிமுகமானார். அடுத்து ’பேசாத கண்ணும் பேசுமே’ படத்தில் குணாலின் தங்கையாக நடித்தார். ஆனால் பெரிதாக ரெஸ்பான்ஸ் கிடைக்கவில்லை. பிறகு கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும்போது தான் சின்னத்திரையில் அறிமுகமானார்.

  அபோது, சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருந்த மெட்டி ஒலி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதை தொடர்ந்து இவர் செல்லமே, முந்தானை முடிச்சு, ஆனந்தம் போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார். இது தவிர மரகத வீணை, கல்யாண பரிசு, பாசமலர் உள்ளிட்ட நாடகங்களிலும் நடித்து வந்துள்ளார். மேலும் விஜய் டிவியில் சின்னதம்பி, கலைஞர் டிவியில் ரேகா ஐபிஎஸ் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். மானாட மயிலாட மற்றும் ஜோடி நிகழ்ச்சியிலும் போட்டியளராக கலந்துக் கொண்டுள்ளார்.
  இந்நிலையில் கிருத்திகா தன்னுடைய உடல் எடையை 86 கிலோவிலிருந்து 63 கிலோவாக குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார். இவர் 2012 -லிருந்து 2021-ஆம் ஆண்டு வரை தன்னுடைய உடல் எடையை குறைத்தது குறித்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கிருத்திகா தனது உடல் எடையை 86 கிலோவில் இருந்து 63 கிலோவாக குறைத்து ஸ்லிம்மாக மாறிய இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இவரை போலவே உடல் எடையை குறைத்த பல சீரியல் நடிகைகள் உள்ளனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பூவே பூச்சூடவா சீரியலில் மீனாட்சி என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானவர் நடிகை கிருத்திகா லட்டு. இவர் சீரியல்களில் நடிப்பதற்கு முன்பாக செம குண்டாக இருந்திருக்கிறார். இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த கிருத்திகா தனது உருவமாற்றம் குறித்த ரகசியத்தை பகிர்ந்த அவர், நிபுணரின் மேற்பார்வையில் சரியான டயட், திரவ உணவுமுறை எனப்படும் லிக்விட் டயட்டை பின்பற்றி சுமார் 37 கிலோ வரை உடல் எடையை 6 மாதத்திற்குள் குறைத்ததாக தெரிவித்துள்ளார். மேலும் அவரது புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: