சின்னத்திரையின் லேட்டஸ்ட் காதல் ஜோடியான கண்மணி - நவீன் நிச்சயதார்த்தம் முடிந்த கையொடு கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ள போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
செந்தில் - ஸ்ரீஜா, சஞ்சீவ் - ஆலியா மானசா, ஷபானா- ஆர்யன், சித்து - ஸ்ரேயா ஜோடிகளைப் போல் லேட்டஸ்டாக இணைந்த நவீன் - கண்மணியையும் சின்னத்திரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சின்னத்திரையில் சீரியல் நடிகைகளைப் போலவே பிரபலமாக வலம் வருபவர் கண்மணி சேகர். கண்மணியின் க்யூட்டான முகமும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் ஏராளமானோரைக் கவர்ந்திழுந்துள்ளது.
குறிப்பாக அவருடைய ஹேர் ஸ்டைல் மற்றும் புடவையை பார்ப்பதற்காகவே காத்திருப்பவர்கள் ஏராளம். காவிரி டிவி, மாலைமுரசு, ஜெயா டிவி என பல்வேறு தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த இவர் தற்போது சன் டிவியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
also read : பூமியை நினைத்து உருகும் அஞ்சலி: முத்தழகு சீரியலில் அதிரடியான திருப்பம்
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘இதயத்தை திருடாதே’ தொடரின் முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சிவா என்ற கதாபாத்திரத்தில் நவீன் நடித்து வருகிறார். இவருக்கும் கண்மணிக்கும் காதல் என பல மாதங்களாகவே இணையத்தில் கிசுகிசுக்கள் பரவி வந்தன. அது உண்மை தானோ என்பது போல், இருவரும் ஒன்றாக இருக்கும் போட்டோவை மாறி, மாறி சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வந்தனர். விசாரித்ததில் இருவரும் உறவுக்காரர்கள் என்பது தெரியவந்தது.
சரி, எல்லா ஜோடிகளையும் போல் ‘நாங்க நல்ல நண்பர்கள் தான்... காதலிப்பதாக சொல்வது எல்லாம் வெறும் வதந்தி’ என்று தான் சொல்லப்போகிறார்கள் என அனைவரும் காத்திருந்த நிலையில், கடந்த மாதம் நவீன் - கண்மணி இருவரும் பொத்தி, பொத்தி வைத்திருந்த ரகசியத்தை ரசிகர்களுக்கு ஓபன் செய்தனர். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஜோடியாக பங்கேற்ற இருவரும், தாங்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்தனர். அதிலும் கண்மணி “எங்க அப்பாவுக்கு பிடித்தது போல் ஒருவரை தான் திருமணம் செய்ய வேண்டும் என காத்துக்கொண்டிருந்தேன். என் அப்பாவை போல ஒருத்தர் கிடைத்துவிட்டார்” என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
also read : கே.ஜி.எஃப் ராக்கியின் ஃபிட்னஸ் சீக்ரெட் இதுதான்!
ஏப்ரலில் நிச்சயதார்த்தம், ஜூன் மாதத்தில் திருமணம் என்ற அதிகாரப்பூர்வ தகவலையும் நவீன் வெளியிட்டார். சொன்னது போலவே கடந்த 15ம் தேதி நவீன் - கண்மணி நிச்சயதார்த்தம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு சின்னத்திரை பிரபலங்களும் பங்கேற்றனர். அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ள நிலையில், நடிகர் நவீன் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ள போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.
காதல் ஜோடி டூ புதுமண தம்பதியாக மாற உள்ள நவீன் - கண்மணி இருவரும் முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது நவீன் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை நவீன், கண்மணி இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்ய, லைக்குகள் குவிந்து வருகின்றன.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.