Home /News /entertainment /

திருமண கோலத்தில் சன் டிவி சீரியல் நடிகை.. ஷாக்கான ரசிகர்களுக்கு கிடைத்தது பதில்!

திருமண கோலத்தில் சன் டிவி சீரியல் நடிகை.. ஷாக்கான ரசிகர்களுக்கு கிடைத்தது பதில்!

சமீபத்தில் மாலை மற்றும் கழுத்தில் தாலியுடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்திருந்தார்.

சமீபத்தில் மாலை மற்றும் கழுத்தில் தாலியுடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்திருந்தார்.

சமீபத்தில் மாலை மற்றும் கழுத்தில் தாலியுடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்திருந்தார்.

    சின்னத்திரையில் நடித்து வெள்ளித்திரைக்கு சென்று பிரபலமாகும் பட்டியலில் பலர் சேர்ந்து கொண்டே இருக்கிறார்கள். பிரபல தமிழ் சேனலாக இருக்கும் சன் டிவி-யின் மெகாஹிட் சீரியல்களில் ஒன்று நாயகி. சன் டிவி-யில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 19 முதல் 2020-ஆம் ஆண்டு அக்டோபர் 31 வரை இரவு ஒளிபரப்பாகிய சீரியல் தான் நாயகி. குடும்ப பின்னணியை கொண்ட காதல் சீரியலான இதில் பிரபல நடிகை விஜயலட்சுமி, ஹீரோயினாக ஆனந்தி என்ற ரோலில் நடித்தார். சில மாதங்கள் இவர் ஆனந்தியாக தொடர்ந்த நிலையில், விஜய் டிவி-யின் பிரமாண்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸில் பங்கேற்கும் வாய்ப்பு நடிகை விஜயலட்சுமியை தேடி வந்தது.

    இதனை அடுத்து நாயகி சீரியலில் இருந்து விலகிய விஜயலட்சுமிக்கு பதிலாக ஆனந்தியாக சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை வித்யா பிரதீப். இவர் ஏற்கனவே சில தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் நாயகி சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு அமைந்தது. எனவே இவர் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்தவர் ஆவார்.

    சின்னத்திரைக்கு வருவதற்கு முன் சைவம், பசங்க 2, அதிபர், ஒண்ணுமே புரியல, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருந்தார் . ஆனந்தி கேரக்டரை இவர் ஏற்ற போது நாயகி சீரியலை தொடர்ந்து பார்த்து வந்த ரசிகர்கள் யோசனையில் இருந்தனர். சின்னத்திரைக்கு புதிதாக இருக்கிறாரே, இவர் எப்படி நடிக்க போகிறாரோ என்று. ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி நாயகி சீரியல் மெகா ஹிட்டாக முக்கிய காரணமாக இருந்தார். நாயகி சீரியலில் நடித்து கொண்டிருந்த போதே வெள்ளித்திரை வாய்ப்புகளையும் தேடிய படி இருந்தார். நாயகி மூலம் இவர் பெற்ற புகழ் காரணமாக அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆனார். அசுரகுலம், ஒத்தைக்கு ஒத்தை,மாரி 2, தடம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Dr. Vidya Pradeep (@vidya.pradeep01)






    தற்போது பல முக்கிய பிராண்ட் விளம்பரங்களில் நடித்தும் வருகிறார். பயோ டெக்னாலஜி படிப்பில் முதுகலை பட்டம் பெற்று, மருத்துவ துறையில் நல்ல அங்கீகாரத்தை பெற்றுள்ள இவர் மாடலிங்கில் நுழைந்து சாதித்து அதன் மூலம் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலும் கலக்கி வருகிறார். சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் வித்யா பிரதீப், சமீபத்தில் மாலை மற்றும் கழுத்தில் தாலியுடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் ஷேர் செய்திருந்தார்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கர்ப்பமாக இருக்கிறாரா?

    இதை பார்த்த அவரது ரசிகர்கள் ஒருவேளை வித்யா பிரதீப் திடீர் திருமணம் செய்து கொண்டாரோ என்று பரபரத்தனர். ஆனால் ரசிகர்களை ஷாக்காக்கிய இது, போட்டோ ஷூட் ஒன்றிற்காக எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Sun TV

    அடுத்த செய்தி