• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சன் டிவியில் இருந்து அந்த சேனலுக்கு போன சீரியல் நடிகை.. பின்னாடி இவ்வளவு காரணம் இருக்காம்!

சன் டிவியில் இருந்து அந்த சேனலுக்கு போன சீரியல் நடிகை.. பின்னாடி இவ்வளவு காரணம் இருக்காம்!

சன் டிவி சீரியல் நடிகை

சன் டிவி சீரியல் நடிகை

இந்த சீரியலை நடிகை நீலிமா ராணி தயாரித்து வருகிறார். இந்த சீரியல் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. ஆனால், ஸ்ரீநிதி எதற்காக மாற்றப்பட்டார்?

  • Share this:
    ன் டிவியில் ஒளிப்பரப்பான நாயகி சீரியல் மூலம் பிரபலமானவர் தான் சுஷ்மா நாயர். பிறகு இவர் சன் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் மற்றொரு சீரியலான திருமகள் சீரியலில் பிரகதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார்.

    சமீப காலமாக, சின்னத்திரை சீரியல் நடிகர்கள் தாங்கள் நடிக்கும் சீரியல்களில் இருந்து விலகி வேறொரு சேனல் சீரியலுக்கு மாறி வருவது வாடிக்கையாக விட்டது. சமீபத்தில் கூட ஜீ தமிழ் மற்றும் கலர்ஸ் தமிழ் சீரியல்களில் நடித்துக்கொண்டிருந்த சில சீரியல் நடிகர்கள் சன் டிவிக்கு மாறியுள்ளனர். அதேபோல விஜய் டிவியில் நடித்துக்கொண்டிருந்த சின்னத்திரை பிரபலங்கள் கூட வேறு சில சேனல்களுக்கு சென்று விட்டனர்.

    சின்னத்திரையை பொறுத்தமட்டில் ஒரே நபர் வேறு சேனல்களுக்கு சென்றுவிட்டால் அவர், தற்போது நடிக்கும் சீரியலில் இருந்து வெளியேற்றப்படுவார். இருப்பினும் சப்போர்டிங் ரோலில் நடிக்கும் நடிகர்கள் சிலர் வெவ்வேறு சேனல்களில் ஓடும் சீரியல்களில் நடித்து வருகின்றனர். அதில் சிலர் வேறு சேனல்களுக்கு மாறும் போது ஏற்கனவே நடித்துவரும் சீரியல்களை விட்டு விலகிவிடுகின்றனர். அந்த வகையில், சன் டிவி தொடர்களில் நடித்து பாப்புலர் ஆன சுஷ்மா நாயர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் என்றென்றும் புன்னகை சீரியலில் நடிக்க தொடங்கி இருப்பதாக அறிவித்து இருக்கிறார்.

    சன் டிவியில் ஒளிப்பரப்பான நாயகி சீரியல் மூலம் பிரபலமானவர் தான் சுஷ்மா நாயர். பிறகு இவர் சன் டிவியில் ஓடிக்கொண்டிருக்கும் மற்றொரு சீரியலான திருமகள் சீரியலில் பிரகதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில், ஜீ தமிழில் இணைந்திருப்பது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,
    "வணக்கம் தோழர்களே!! மீனாட்சி அம்மனின் ஆசியுடன்! நான் தற்போது ஜீ தமிழ் குடும்பத்தில் ஒரு பகுதியாக இணைந்திருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். நான் என்றென்றும் புன்னகை சீரியலில் நடிக்கிறேன்.

    இதுவரை எனக்கு நீங்கள் கொடுத்த ஆதரவை போலவே இப்போதும் உங்கள் ஆசீர்வாதமும் ஆதரவும் கிடைக்கும் என நம்புகிறேன். நான் என்றென்றும் புன்னகை சீரியலில் நிலா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இங்கும் எனது சிறப்பான நடிப்பை நீங்கள் காண்பீர்கள். " எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவரது பதிவில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, " நிலா கதாபாத்திரத்தில் நடிக்க என்னைத் தேர்ந்தெடுத்ததற்காக esaipictures தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்தப் புதிய கதாபாத்திரத்தில் நடிக்க நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்.

    "இதற்கு முன்பு ஸ்ரீநிதி நடித்து வந்த ரோலில் தான் நான் தற்போது நடிக்க தொடங்கி இருக்கிறேன் என்றாலும், ஸ்ரீநிதி தனது ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் இதயத்தில் எப்போதும் இருப்பார். ஸ்ரீநிதியை சீரியல் குழுவினர் அதிகம் மிஸ் செய்கிறார்கள். நாம் சந்திக்கவில்லை என்றாலும் உங்களை பற்றி அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Sushma Nair (@sushmanair07)






    இந்த சீரியலை நடிகை நீலிமா ராணி தயாரித்து வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் இந்த சீரியல் வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. ஆனால், ஸ்ரீநிதி எதற்காக மாற்றப்பட்டார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: