திருமண புகைப்படத்தை வெளியிட்ட திருமகள் சீரியல் நடிகை

சீரியல் நடிகை சுஷ்மா நாயர் திருமணம்

சன் டிவி திருமகள் தொடர் நடிகை சுஷ்மா நாயர் தனது திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

  • Share this:
கொரோனா அச்சுறுத்தலால் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சின்னத்திரை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. அப்போது பழைய எபிசோட்கள் மீண்டும் ஒளிபரப்பாகி வந்தன. ஊரடங்கில் தளர்வுகள் அளித்து ஜூலை மாதத்திலிருந்து ஷூட்டிங் நடந்தாலும் பாதுகாப்பு காரணம் மற்றும் வெளியூரிலிருந்து படப்பிடிப்புக்கு வந்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளிட்ட காரணங்களால் ஒரு சில தொடர்கள் நிறுத்தப்பட்டன. புதிதாக ஒரு சில சீரியல்கள் ஒளிபரப்பாகத் தொடங்கின.

அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் திருமகள். ஹரிகா, சுரேந்தர் சண்முகம், ஷமிதா ஸ்ரீகுமார், சுஷ்மிதா நாயர் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் இத்தொடர் தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

இத்தொடரில் பிரகதியாக நடித்து வந்தவர் சுஷ்மா நாயர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் தொடரிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக நடிகை நிவேதிதா நடிப்பார் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகை சுஷ்மிதா நாயருக்கும் லிஜோ டி ஜான் என்பவருக்கும் ஏப்ரல் 18-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் மணமக்களின் குடும்பத்தார் மட்டும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இத்திருமணத்தில் கலந்து கொண்டுள்ளனர். திருமண வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளார் சுஷ்மா நாயர். 
View this post on Instagram

 

A post shared by Sushma Lijo (@sushmanair07)


இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் லைக்ஸ்களை குவித்து வருகிறது. திருமகள் சீரியலுக்கு முன்பாக நாயகி, சுமங்கலி உள்ளிட்ட சீரியல்களில் சுஷ்மா நாயர் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: