• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ’நாகினி’ மெளனி ராய்க்கு விரைவில் திருமணம்! யாரை தேர்ந்தெடுத்திருக்கிறார் தெரியுமா?

’நாகினி’ மெளனி ராய்க்கு விரைவில் திருமணம்! யாரை தேர்ந்தெடுத்திருக்கிறார் தெரியுமா?

நாகினி மெளனி ராய்

நாகினி மெளனி ராய்

மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த சுராஜ் தனது உழைப்பின் மூலம் தொழிலதிபராக உயர்ந்துள்ளார்.

  • Share this:
    நாகினி புகழ் மெளனி ராய்க்கு கூடிய விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. நீண்ட நாள் காதலரை மணக்கிறார்.

    நாகினி சீரியலில் ஷிவானியாக நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை மெளனி ராய். இவர் நாகினி சீரியலில் ஷிவானி கதாபாத்திரத்தில் நடித்தார். பாம்பு சீரியல் என்றாலும் ரொமான்ஸ் மற்றும் காதல் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. முதல் பாகம் சன் டிவியில் ஒளிப்பரப்பானது. இந்தி சீரியலான நாகினி சீரியல் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிப்பரப்பானாலும் இந்த சீரியலுக்கு மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் கூட்டம் இருந்தது. குறிப்பாக இளைஞர்கள் அதிகம் விரும்பி இந்த சீரியலை பார்த்தனர். அதற்கு மிக முக்கிய காரணம், ஷிவானியாக நடித்த மெளனி ராய். அதன் பின்பு நாகினி தொடரின் பல பாகங்கள் வெளிவந்ததாலும் மெளனி ராய்க்கு கிடைத்த வரவேற்பு போல் நாகினியாக நடித்த மற்ற நடிகைகளுக்கு கிடைக்கவில்லை.

    இந்த சீரியலுக்கு பின்பு பாலிவுட்டில் பிஸியான மெளனி ராய், சல்மான்கான் உடன் ஒரு பாடலிலும் நடனம் ஆடியுள்ளார். இந்நிலையில் மெளனி ராய், நீண்ட நாள் காதலாரான சுராஜ் நம்பியாரை கூடிய விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுராஜ் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆவர். இவர் பிறந்தது வளர்ந்தது எல்லாமே பெங்களூரில் தான். மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்த சுராஜ் தனது உழைப்பின் மூலம் தொழிலதிபராக உயர்ந்துள்ளார். இவரை தான் மெளனி ராய் வரும் ஜனவரி மாதம் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    இதுக்குறித்த தகவலை முதலில் மெளனி ராய் உறவினர் ஒருவரே வெளியிட்டுள்ளார். சமீபத்தில் தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்த அவர், மெளனி ராய் திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதுமட்டுமில்லை இவர்களின் திருமணம் வரும் ஜனவரி மாதம் துபாய் அல்லது இத்தாலியில் நடைபெறும் எனவும் அவர் கூறியுள்ளார்.

     

    மெளனி ராய் மற்றும் சுராஜ் நம்பியார்


    திருமண வரவேற்பு நிகழ்ச்சி பீகாரில் நடைபெறும் எனவும் கூறியுள்ளார். சமீபத்தில் தனது 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய மெளனி ராய்க்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் எப்போது திருமணம்? என்ற கேள்வியையும் முன் வைத்திருந்தனர். அதற்கான பதில் இதோ கிடைத்துவிட்டது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: