சீரியல் நடிகை கீதாஞ்சலி தற்போது திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான ’நாதஸ்வரம்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை கீதாஞ்சலி. அந்த சீரியலை இயக்கியதோடு, ஹீரோவாகவும் நடித்திருந்தார் திருமுருகன். அவரின் காதலியாக நடித்திருந்தார் கீதாஞ்சலி.

நாதஸ்வரம் சீரியலில் கீதாஞ்சலி
முதல் கீரியலிலேயே அவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. காரைக்குடியை பூர்வீகமாக கொண்ட கீதாஞ்சலிக்கு, நாதஸ்வரம் ஷூட்டிங் அந்த பகுதியிலேயே நடந்தது இன்னும் எளிதாக இருந்தது. நாதஸ்வரம் சீரியலை தொடர்ந்து வாய்ப்புகள் வந்ததால் அம்மாவுடன் சென்னையில் குடியேறினார்.

கணவர் கீர்த்தி ராஜுடன்
பின்னர் ஜீ தமிழில் ‘நிறம் மாறாத பூக்கள்’, விஜய் டிவி-யில் ‘ராஜா ராணி’ ஆகிய சீரியல்களில் கமிட்டாகி நடித்தார். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு சீரியல்களில் நடிப்பதால் தேதிகளில் பிரச்னை ஏற்பட, ராஜா ராணி சீரியலில் இருந்து விலகினார். நிறம் மாறாத பூக்களில் தொடர்ந்து நடித்து வந்தார் கீதாஞ்சலி. பின்னர் அந்த சீரியலும் முடிவுக்கு வந்தது. அதே நேரத்தில் அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததால் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினார் கீதாஞ்சலி.
தற்போது அவருக்கு கீர்த்தி ராஜ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாம். இதையடுத்து கீதாஞ்சலிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்