Home /News /entertainment /

சாகும் வரை நடிப்பேன் - நாதஸ்வரம் சீரியல் நடிகை உருக்கம்!

சாகும் வரை நடிப்பேன் - நாதஸ்வரம் சீரியல் நடிகை உருக்கம்!

பென்சி

பென்சி

மிகவும் கடுமையான மனநெருடிக்கடியில் இருக்கும் போது தான் 'கல்யாண வீடு' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

  சீரியல்களுக்கு இடையே போட்டி என்று வந்துவிட்டால் சன் டிவியின் சீரியல்களை அடித்துக்கொள்ளவே முடியாது. அந்த அளவிற்கு மக்களின் அன்றாட வாழ்க்கையோடு இணைந்து போகும் அளவிலான கதைகளை நாடகங்களாக தயாரித்து ஒளிபரப்புவதில் சன் டிவியை ஒரு கில்லாடி என்றால் அது மிகையாகாது. அப்படியான சன் டிவி நாடகங்களில் 'நாதஸ்வரம்' சீரியலுக்கு ஒரு தனி இடம் உண்டு.

  இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் உருவான இந்த சீரியல் குடும்ப உறவுகளை மையாக கொண்ட ஒரு கதையாகும். 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை, அதாவது ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மொத்தம் 1356 எபிசோடுகளுடன் ஒளிபரப்பப்பட்ட இந்த சீரியலில் நடித்த பல காதாபாத்திரங்களை நம்மால் மறக்கவே முடியாது.

  கோபிகிருஷ்ணன் ஆக இயக்குனர் திருமுருகனே நடிக்க, சொக்கலிங்கமாக நடிகர் டி.எஸ்.பி.கே.மௌலி நடித்து இருந்தார். உடன் மயில்வாகனமாக பூவிளங்கு மோகனும், மலர்க்கொடி காதாபாத்திரத்தை நடிகை ஸ்ரீதிகா ஏற்று நடித்து இருந்தனர். இவர்களுக்கு அடுத்தபடியாக, இந்த சீரியலின் காமேஸ்வரி (காமு) என்கிற கதாபாத்திரத்திற்கும் ரசிகர்கள் அதிகம். குறிப்பிட்ட காதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் நடிகை பென்ஸி பிரிங்க்ளின் ஆவார்!

  நாதஸ்வரம் சீரியலை தொடர்ந்து பென்ஸி 'கல்யாண வீடு' என்கிற சீரியலிலும் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் தன் வாழ்க்கையில் நடந்த பல 'பெர்சனல் மேட்டர்களை' பொதுவெளியில் பகிர்ந்துள்ளார். தனக்கு சிறு வயதில் இருந்தே டான்ஸ் ஆடுவது மிகவும் பிடிக்கும். பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடியை முறையாக கற்றுக் கொண்டேன். என் அப்பாவுக்கும் நடிப்பின் மீது ஆர்வம், இந்தியன் வங்கியில் மேனேஜர் ஆக இருந்தாலும் கூட அவ்வப்போது ஆடிசன்களுக்கு செல்வார்.

  அப்படி போகும்போது ஒரு முறை என்னையும் உடன் அழைத்து சென்றார். அங்கே என்னை பார்த்த ஒருவர், குழந்தை நட்சத்திரமாக நடிக்க பொருத்தமாக இருப்பேன் என்று சொல்லி தினமும் முகத்திற்கு தயிர் போட சொல்லி அறிவுரை கூறினார், அப்போது நான் ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். இப்படித்தான் என் மீடியா பயணம் தொடங்கியது என்று கூறி உள்ளார்.

  பல முயற்சிகளுக்கு பின், இயக்குனர் திருமுருகன் சார் வழியாக நாதஸ்வரம் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. திருமுருகன் சாரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன். நாதஸ்வரம் சீரியல் முடியும் நேரத்தில் எனக்கு திருமணம் நடைபெற்றது; அது ஒரு அரேஞ்ச் மேரேஜ் ஆகும். பல கனவுகளுடன் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தேன். ஆனால் அது விவாகரத்தில் முடியும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

  விஜய்யை நெல்சன் வச்சி செஞ்சிட்டாரு... கே.ஜி.எஃபே போயிருக்கலாம் - குமுறிய விஜய் ரசிகர்

  திருமண வாழ்க்கை நன்றாக இல்லை என்றால் வாழ்க்கையே வீணாகிவிடும். எனக்கு பின் இரண்டு தங்கைகள் இருந்தார்கள். நான் விவாகரத்து வாங்கினால் என் குடும்பத்தில் உள்ளவர்கள் கஷ்டப்படுவார்கள் என்று முதலில் தயங்கினேன், பின்னர் ஒரு கட்டத்தில் இந்த ரிலேஷன்ஷிப்பை தொடர முடியாது என்று என் அம்மா அப்பாவிடம் சொல்லி புரிய வைத்தேன் என்றும் பென்ஸி கூறி உள்ளார்.

  Nadhaswaram serial actress Benzie shares her sad side of life, nadhaswaram serial all episodes, nadhaswaram serial, sambandham real name, nadhaswaram cast, nadhaswaram serial comedy actor name, nadhaswaram serial last episode, nadhaswaram music, nadhaswaram serial cast and crew, nadhaswaram cast and crew, Benzy, serial actress benzy, sun tv nadhaswaram, சன் டிவி நாதஸ்வரம், நாதஸ்வரம் சீரியல், நாதஸ்வரம் பென்சி

  சென்னையில் ஊழியர்களுக்கு விடுமுறையுடன் பீஸ்ட் டிக்கெட் பரிசளித்த ஐ.டி நிறுவனம்!

  மீண்டும் ஒருவரை திருமணம் செய்வது குறித்து யோசிப்பதே எனக்கு பயமாக இருக்கிறது. மிகவும் கடுமையான மனநெருடிக்கடியில் இருக்கும் போது தான் 'கல்யாண வீடு' சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது முதல் நாம் என்னுடைய வேலையில் கவனம் செலுத்த தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக மன அழுத்ததிலிருந்து மீண்டு வந்தேன்.

  திருமுருகன் சார் முதல் ஒட்டு மொத்த டீமும் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள். எனக்கு சாகுற வரைக்கும் நடிக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது. மிகவும் விரைவில் திருமுருகன் சாருடைய அடுத்த சீரியல் வழியாக அனைவரையும் சந்திப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும் பென்ஸி உருக்கமாக கூறி உள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published:

  Tags: TV Serial

  அடுத்த செய்தி