முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சன் டிவி சீரியலில் செம்பருத்தி ஷபானா... டைட்டில் வித்தியாசமா இருக்கே!

சன் டிவி சீரியலில் செம்பருத்தி ஷபானா... டைட்டில் வித்தியாசமா இருக்கே!

ஷபானா ஆர்யன்

ஷபானா ஆர்யன்

சன் டிவி-யின் மிஸ்டர் மனைவி சீரியல் மூலம் மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளார் ஷபானா.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

புதிய சீரியலை ஒளிபரப்பவிருக்கிறது சன் டிவி. இதில் செம்பருத்தி சீரியல் நடிகை ஷபானா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு முன்னோடியாக திகழ்வது சன் டிவி. இதில் ஒளிபரப்பான பல சீரியல்கள் தற்போது மற்ற சேனல்களில் மறு ஒளிபரப்பாகி வருகின்றன. மெட்டிஒலி, திருமதி செல்வம், சித்தி, கோலங்கள், ஆனந்தம், அண்ணாமலை என சன் டிவி-யின் பல சீரியல்கள் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த வகையில் தற்போது மிஸ்டர் மனைவி என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாகவிருக்கிறது.

இதில் செம்பருத்தி சீரியல் ஷபானா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செம்பருத்தி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான அவர் குறுகிய காலத்தில் ரசிகர்களுக்கு நெருக்கமானார். 1000 எபிசோட்களைக் கடந்த ‘செம்பருத்தி’ சீரியலின், கார்த்திக் – பார்வதி ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதற்கிடையே நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஷபானா நடிப்பதில் இருந்து சிறிது இடைவெளி எடுத்திருந்தார்.

Exclusive: நடிகர் மயில்சாமி மரணம் உணர்த்தும் பாடம்.. 40+ வயதுடையோருக்கு மருத்துவர் சொல்லும் அட்வைஸ்..

' isDesktop="true" id="895752" youtubeid="tn8fDYXF1sI" category="television">

இந்நிலையில் தற்போது சன் டிவி-யின் மிஸ்டர் மனைவி சீரியல் மூலம் மீண்டும் நடிப்புக்கு திரும்பியுள்ளார். தற்போது அதன் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் கண்ணான கண்ணே சிரியல் முடிந்ததும், அந்த ஸ்லாட்டில் மிஸ்டர் மனைவி ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sun TV