முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / சித்தி 2 வெண்பாவின் புதிய சீரியல் மலர்!

சித்தி 2 வெண்பாவின் புதிய சீரியல் மலர்!

மலர் சீரியல்

மலர் சீரியல்

மலரின் அக்கா பார்வதியாக இதில் நிவிஷா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சன் டிவி-யில் மலர் என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக விருக்கிறது.

அனைத்து முன்னணி தமிழ் தொலைக்காட்சி சேனல்களும் பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்தில் புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அப்படி புதிதாக ஒளிபரப்பாகவிருக்கும் சீரியல்களில் ஒன்று ‘மலர்.’ ப்ரீத்தி ஷர்மா மற்றும் இந்திரன் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த சீரியலில் நிவிஷா, அக்னி மற்றும் ரெஜினா ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கவுள்ளனர்.

மலர் சீரியல், பிரபல மலையாள தொலைக்காட்சி தொடரான சாந்த்வானத்தின் ரீமேக் ஆகும். ப்ரீத்தி ஷர்மா தனது ‘மலர்’ கதாபாத்திரத்தைப் பற்றிப் பேசுகையில், “மலர் என்ற புத்திசாலியான, வலிமையான பெண்ணாக, எல்லாச் சூழ்நிலைகளிலிருந்தும் தற்காத்துக் கொள்ளும் வழியை அறிந்தவளாகவும், தடைகள் வந்தாலும் வளைந்து கொடுக்காதவளாகவும் நடிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கதாபாத்திரம் அவளுடைய எளிமையான இயல்பு காரணமாக பார்வையாளர்களை ஈர்க்கும் என்று நம்புகிறேன்" என்றார்.
 
View this post on Instagram

 

A post shared by SunTV (@suntv)ப்ரோமோவில், மலர் ஒரு மென்மையான மற்றும் கனிவான பெண்ணாக இருப்பதைக் காணலாம், அவர் கோவிலில் கடவுளை மனதார வேண்டிக்கொண்டு அனைத்து சடங்குகளையும் செய்கிறார். கோவிலில் இருக்கும் பக்தர்கள், கவலைப்பட வேண்டாம் உனக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று உறுதியளிக்கிறார்கள். ஆனால் மலர் தன் சகோதரி பார்வதிக்காக பிரார்த்தனை செய்வதாகக் கூறுகிறாள். மலரின் அக்கா பார்வதியாக இதில் நிவிஷா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Sun TV