Home /News /entertainment /

TRP ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்த கயல் சீரியல்.. ரோஜா சீரியலுக்கு இப்படியொரு நிலையா?

TRP ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்த கயல் சீரியல்.. ரோஜா சீரியலுக்கு இப்படியொரு நிலையா?

கயல் சீரியல்

கயல் சீரியல்

Sun Tv kayal Serial : சன் டிவியில் 15க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் கயல் சீரியல் முதல் இடம் பிடித்துள்ளது.

விஜய் டி.வி., கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் என எத்தனை என்டர்டெய்னர் சேனல்கள் வந்தாலும், எப்போதுமே சன் தொலைக்காட்சிக்கு தமிழக மக்கள் மனதில் தனி இடம் உண்டு. அதுவும் சன் டி.வியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே இல்லத்தரசிகளிடம் மவுசு அதிகம். சன் டிவி-யில் காலை 9.30 மணி முதல் இரவு 11 மணி வரை கிட்டத்தட்ட 15-க்கும் மேற்பட்ட சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. பூவே உனக்காக, மகராசி, திருமகள், சித்தி2, பாண்டவர் இல்லம், சந்திரலேகா, அருவி, தாலாட்டு, அபியும் நானும், சுந்தரி, கயல், வானத்தை போல, கண்ணான கண்ணே, ரோஜா, எதிர்நீச்சல், அன்பே வா உள்ளிட்ட பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இந்த சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் தற்போது வெளியாகியுள்ளது. இதில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் ‘கயல்’ சீரியல் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி முதல் இரவு 7.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலை இந்த தொடரை சன் என்டர்டெயின்மெண்ட் மற்றும் விஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர். சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் கார்த்திக் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, பி.செல்வம் என்பவர் இத்தொடரை இயக்கி வருகிறார்.also read : எங்கள் ஃபேவரெட் இடமான பால்கனியில் திருமணம் - ரன்பீர் கபூரை கரம் பிடித்த ஆலியா பட்!

நர்ஸாக பணியாற்றி வரும் கயல் என்ற பெண் தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு அண்ணன், தம்பி, தங்கைகள் அடங்கிய பெரிய குடும்பத்தை காப்பாற்ற எப்படி போராடுகிறார். அவருடைய குடும்பத்தை கெடுக்க நினைக்கும் தனது தந்தையின் அண்ணனின் சதித்திட்டங்களை எப்படி முறியடிக்கிறார் என்பது தான் கதைக்களம். கடந்த சில வாரங்களாகவே கயல் சீரியல் பல சுவாரஸ்யமான திருப்புமுனைகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.கயல் தங்கையின் திருமண நிச்சயதார்த்தம், அவரது வயிற்றில் வளரும் குழந்தை பற்றிய ரகசியம் உடையுமா? போன்ற முக்கிய நிகழ்வுகள் சுவாரஸ்யமாக ஒளிபப்பப்பட்டன. இதனால் கயல் சீரியல் சன் தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தை ‘சுந்தரி’ சீரியல் பிடித்துள்ளது.

also read : ராஜா ராணி 2 பிரபலமா இது? வைரலாகும் பழைய போட்டோ.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
 இரண்டு மனைவிகளை வைத்துக் கொண்டு கார்த்திக் என்ற நபர் ஆடும் கண்ணாம்பூச்சி ஆட்டத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் ‘சுந்தரி’ தொடரிலும் கடந்த வாரம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. கார்த்திக்கின் மாமியார் அவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து வந்தார். தற்போது அது சுந்தரி தான் என்பதும், அவர் தான் கார்த்தியின் முதல் மனைவி என்ற சஸ்பென்ஸும் உடைந்துள்ளது. இனி கார்த்தியின் காதல் மனைவியான அனுவுக்கு உண்மை தெரிந்தால் என்ன நடக்கும்? என்ற பரபரப்பான சூழ்நிலையில் சீரியல் செம்ம விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

 

sundari serial cast Gabrella Sellus instagram

 

இந்த சீரியலில் சுந்தரியாக கேப்ரியெல்லா செல்லஸ், கார்த்திக்காக ஜிஷ்ணு மேனன், அனுவாக ஸ்ரீகோபிகா நீலநாத், அனுவின் அம்மாவாக நிஹாரி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த பட்டியலில் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற ரொமான்டிக் சீரியலான ரோஜா 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அப்பா - மகள் பாசத்தை மையமாக கொண்ட ‘கண்ணான கண்ணே’ சீரியல் 5வது இடத்திலும், புத்தம் புது சீரியலான ‘எதிர் நீச்சல்’ 6வது இடத்திலும் உள்ளது. மகளை தேடும் அம்மாவின் பாசப்போராட்டம் பற்றி ‘அபியும் நானும்’ சீரியல்7வது இடத்திலும் உள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மற்றொரு புதிய தொடரான அருவி 8வது இடத்திலும், சந்திரலேகா 9-ஆம் இடத்தையும், பாண்டவர் இல்லம் 10வது இடத்தையும் பிடித்துள்ளது.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Sun TV

அடுத்த செய்தி